|
மாண்டதென்ன திண்ணையிலே
கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டான். அவன் திடீர்
மரணத்தைக் குறித்து வருந்தி துடி துடித்து மனைவி
அழுகிறாள்.
சோப்பு படி கிணறு
சோமம்
துவைக்கும் கல்லு
சோப்பு
பெட்டி இங்கிருக்க-நீங்க
சோர்ந்ததென்ன
திண்ணையிலே
மல்லு துவைக்கும்
கல்லு
மாசிப்படி
கிணறு
மல்லு பெட்டி
இங்கிருக்க-நீங்க
மாண்ட
தென்ன திண்ணையிலே
கருத்த
புளியங் கொட்டை
கருத்தா
பொழைக்குதுங்க-நான்
கஸ்தூரி
நல்ல மஞ்சா
கனங்
கொறஞ்சி நிக்கறனே
செவந்த
புளியங் கொட்டை
சீரா
பொளைக்குதுங்கோ-நான்
சேலத்து
நல்ல மஞ்சா
சீரழிஞ்சு நிக்கரனே
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அருர்,
தருமபுரி மாவட்டம். |
|