|
இந்நூல், ஒவ்வொரு பதிப்பிலும், விரிவும்
திருத்தமும் அடைந்து
வருவதுண்டு. அதுபோலவே இந்த ஏழாம் பதிப்பும் பல
திருத்தங்களை
அடைந்துள்ளது. ஒருவர் தாமே படித்து எளிதில்
புரிந்து கொள்ளத்தக்க இனிய
முறையில் தெளிவான வகையில் நடைமுறைத் தமிழை
வழுவின்றி எழுதக்
கூடிய அளவிற்கு இந்நூல், நாள், வார, மாத இதழாசிரியர்களுக்கும்,
தமிழ்
மொழியைக் கற்க விரும்புகிறவர்களுக்கும், வெளியீட்டு
நிலையங்களுக்கும்.
அச்சகங்களுக்கும் மிகவும் பயன்படுவதையே நோக்கமாகக் கொண்டு
இயற்றப்பட்டுள்ளது. இதை ஒரு முறை நோக்குவார்க்கும்
இவ்வுண்மை நன்கு
புலனாகும்.
தமிழ் ஆட்சி மொழியாகியுள்ள இந்நாளில் அரசாங்க அலுவலக
எழுத்தர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிழை
நீக்க உதவியாவதோடு உடனடிப்
பார்வைத் திருத்தக் கையேடாகவும் (Ready Reference Book)
இந்நூல்
பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. இதில் ஐயமுறும் சொற்கள்
பட்டியல்
தரப்பட்டுள்ளது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு எளிதாக விளங்கும் பொருட்டு
ஆங்காங்கு ஆங்கிலக் குறியீடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பதிப்பு அச்சாகிய போது அச்சுப்பார்வைப் படிகளைத் திருத்தி
உதவிய நண்பர்கள் சென்னை முத்தியாலுப்பேட்டை மேனிலைப்
பள்ளித்
தமிழாசிரியராயிருந்து ஓய்வு பெற்ற திருவாளர் ச.
சீனிவாசன், M.A.,
அவர்களுக்கும், திருவாளர் பூ. ஜயராமன், M.A., அவர்களுக்கும்
என்
உளமார்ந்த நன்றியும் வாழ்த்தும் உரியதாகுக. இவர்கள் நீடுவாழ
வாழ்த்துகிறேன். காலத்துக்கு ஏற்ற இந்நூலைப் பலரும் வாங்கிப்
படித்துப்
பயனடைவார்கள் என்று நம்புகிறேன். வளர்க நல்ல
தமிழ்!
|
23-10-1984 |
அ.கி.
பரந்தாமனார். |
|