பக்கம் எண் :
 
தமிழ்நெறி விளக்கம் 3
5.“இனையல் வாழி யெம்மூர் மலர்ந்த
பழனத் தாமரைக் கெழீஇய வண்டுநின்
கண்ணென மலர்ந்த காமர் சுனைமலர்
நண்ணி நாளு நலனுக ரும்மே”               
(சிற்றட்டகம்)
இதுவுமது.
6. “மனவே ரல்குன் மடந்தை கூட்டம்
கனவே தெரியின் யாவதும்
நனவே யெனினு நண்ணலோ வரிதே”
                     (
களவியற்- 25, நம்பி. 133 மேற்.) (3)
 
என்பது எய்துத லருமை.
7. 1புலனன் றென்ப வின்னுயி ரதுவே
அலர்முலை யாகந் தாங்கி
நிலவொளி *மதியி னிலவுமெ னுயிரே” (4)
                                   (
களவியற். 25, மேற்.)
 
என்பது உயிரெனக் கூறல்.
8.“கனவே யாயினு நனவே யாயினும்
நல்வினை தந்ததொன் றன்றே யதனால்
மெல்லிய லாகம் மேவவும் பெறுமே”(5)
என்பது தெய்வந் துணையாகக் கொண்டு ஆற்றிப்பெயர்ந்தது.
9.“உடையை வாழி நெஞ்சே யிடைகொண்
டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர்

    1. “காணா மரபிற் றுயிரென  மொழிவோர், நாணிலர் மன்ற  பொய்ம்
மொழிந் தனரே, யா அங் காண்டுமெம் மரும்பெற லுயிரே,   சொல்லு மாடு
மென்மெல வியலும்,  கணைக்கா  னுணுகிய  நுசுப்பின்  மழைக்கண்  மாதர்
பணைப்பெருந்    தோட்டே”  (
தொல். களவு.   10.. மேற்);    தேயத்
தவருயிரைப்புலனன்றென்பர்      செந்நிலத்தைக்   காயக்   கனன்றெதிர்ந்
தார்மருமத்துக் கடுங்கணைகள், பாயச் சிலைதொட்ட பஞ்சவன் வஞ்சிப்பைம்
பூம்பொழிற் கண்ஆயத்  திடையிது     வோதிரி    கின்றதெனனாருயிரே”,
இன்னுயிர்    கண்டறி   வாரில்லை   யென்பரிகன்மலைந்தார்,   மன்னுயிர்
வான்சென்றடையக்   கடையலுள்  வென்றுவையம்,  தன்னுயிர்  போனின்று
தாங்குமெங்கோன் கொல்லித் தாழ்பொழில்வாய், என்னுயி ராயத்  திடையிது
வோநின்றி    யங்குவதே”  (
பாண்டிக்  கோவை);  “என்னுயிர்  யான்கண்
டிளமுலையும் வேய்த்தோளும், பொன்னிறமுங்  கொண்டு   புனமயில்போல்-
மன்னி, வயங்குகின்ற நெய்தல்வாய் வ [ன்னாட]ன் வெற்பில்,   இயங்குகின்ற
தாயத்திடை” (
கிளவி விளக்கம்.)

    (பிரதிபேதம்.) ‘மதியென நிலவு’