பக்கம் எண் :
 
தமிழ்நெறி விளக்கம் 2

1. இயற்கைப் புணர்ச்சி

15.தன்னயந் தெளித்தலுந் தலைப்பிரி வச்சமும்
இன்னியல் வன்பொறை யெய்துத லருமையும்
உயிரெனக் கூறலு மாற்றினன் பெயர்தலும்
செயிர்தபு காதற் றெய்வப் புணர்ச்சி.

     (எ-து.)  சொல்லப்பட்ட    பாகினுள்    தெய்வப்புணர்ச்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ-ள்.) முற்செய்வினை  காரணமாகக் கண்ணுற்றுப் புணர்ந்த பின்பு தலைமகன் நயப்புணர்த்தலும் தெருட்டலும்,  பிரிவச்சமும்,  வன்பொறையும் எய்துதலருமையும், உயிரென்றலும் ஆற்றிப்  பெயர்தலு  மெனப்   பட்டன தெய்வப் புணர்ச்சியாமென்றவாறு.

1.“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
5. நறியவு முளவோநீ யறியும் பூவே?’                 (குறுந்-2)
என்பது நயப்புணர்த்தியது.
2. “யாயு ஞாயு மாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
5.அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே’             (குறுந். 40)
 
என்பது தெளித்தல்.
3.இனையல் வாழி பிரிவொன் றிலனே
நனைமலர் நறும்பூங் கோதை
அமையே னின்னையா னகன்ற ஞான்றே”(1)
                                    (
களவியற். 25, மேற்.)
என்பது பிரிவச்சம்,
4. 1ஆற்றினன் மன்னோ நெஞ்சே பிரியின்
ஆற்றா ளிவளென வழுங்கின மாக
ஆற்றா நிலைமை கைவிட்
டாற்றா ளாயின ளாயிழை யதற்கே”(2)
என்பது வன்பொறை.

     1. இறை. 2, உரை