பக்கம் எண் :
 
34சிதம்பரப்பாட்டியல்

என்பது     “பெறுதரவு  தரவிணையே  ............கொச்சகமாம்’  எ-து,
தரவொன்றே  வந்தால்  தரவுகொச்சகக் கலிப்பா எனவும், தரவிரண்டாய்
வந்தால்  தரவிணைக்கொச்சகக்  கலிப்பா எனவும்,  சிலதாழிசை வந்தால்
சிஃறாழிசைக்கொச்சகக்   கலிப்பா   எனவும்,    பலதாழிசை   வந்தால்
ப்ஃறாழிசைக்கொச்சகக்   கலிப்பா   எனவும்,  பலவடியு  மயங்கிவந்தால்
மயங்கிசைக்  கொச்சகக்  கலிப்பா  எனவும்  பெயராம். “இறுதிநீண் ......
தாழிசையே” எ-து, பலவடியாய் எல்லாவடியுந்  தம்முளளவொத்து ஈற்றடி
நீண்டுவருவது   கலித்தாழிசை.   “எழில்  ஐஞ்சீர்......கலித்துறை”  எ-து,
ஐஞ்சீரால்வரும்  நாலடியையுடையது   கலித்துறை.  “நேரடிநான் குறுதல்
கலிவிருத்தம்”  எ-து,  நாற்சீர்  நாலடியாய் வருவது கலிவிருத்தம். இனி,
வஞ்சிப்பாவுக்குவரலாறு;  “இசை தூங்கலடி..... அகவலிறும் வஞ்சி” எ-து,
தூங்கலோசையினையுடைத்தாய்,   இருசீரடியினையும்   முச்சீரடியினையு
முடைத்தாய்த்   தனிச்சொற்பெற்று  ஆசிரியச்  சுரிதகத்தான்  முடிவது
வஞ்சிப்பா.       ‘குறள்சிந்தொடு’        என்னும்      விதப்பினால்,
குறளடிவஞ்சிப்பாவென்றும்    சிந்தடிவஞ்சிப்பாவென்றும்    பெயருடன்
வழங்கும்   என்க.   “இருசீர்    அறையடி......தாழிசை”   எ-து  இருசீர்
நாலடியாய்   ஒருபொருண்மேன்   மூன்றடுக்கிவருவது  வஞ்சித்தாழிசை.
“ஆங்கவற்றொன்றாந்துறை”  எ-து  அந்தத்தாழிசை  யொன்று  தனியே
வருவது  வஞ்சித்துறை.  “முச்சீரடி   நான்காம்   வஞ்சிவிருத்தம்” எ-து,
முச்சீர் நாலடியாய் வருவது  வஞ்சிவிருத்தம். எ-று. இவற்றுக்கு முறையே
உதாரணம் வருமாறு;___
  

“செல்வப்போர்க்கதக்கண்ணள்.........மருமம்பாய்ந்தொளித்ததே.”

இது, சுரிதகமில்லாத தரவுகொச்சகக் கலிப்பா.

“குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவிற் றகையுறூஉ மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனந் தோன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
எனவாங்கு-
ஆனொடு புல்லிய பெரும்புதன் முனையுங்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே”

இது தனிச்சொற்பெற்றுச் சுரிதகத்தாலிற்ற தரவு கொச்சகக்கலிப்பா.

“வடிவுடை நெடுமுடு வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம்
கொடிபடு வரைமாடக் கூடலார் கோமானே”
-இது தரவு.