பக்கம் எண் :
 
36சிதம்பரப்பாட்டியல்

இஃது,            இடையிடையே             தனிச்சொற்பெற்று,
நேரிசையொத்தாழிசைக்கலிப்பாவிற்   சிறிது  வேறுபட்டுத் தன்றளையான்
வந்தமையாற் சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.
  

“தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியு முடனிறையு முடன்றளர முன்னாட்கட்
கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையி னிறைகவர்ந்து

பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ

                                  -
இது தரவு.

இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவாயேற்
றளநல முகைவெண்பற் றாழ்குழ றளர்வாளோ.

தகைநல மிவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
வுகைநல மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ.

அணிநல மிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநல மகிழ்மேனி மாசொடு மடிவாளோ.

நாம்பிரியே மினியென்று நன்னுதலைப் பிரிவாயே
லோம்பிரியே மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ.

குன்றளித்த திரடோளாய் கொய்புனத்துக் கூடியஞான்
றன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளாமோ.

சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பல்பகலுந் தலையளித்த பனிமொழியும் பழுதாமோ.

எனவாங்கு-தனிச்சொல்.           [இவையாறுந் தாழிசை.

அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும்
பெரும்பெற லரியன வெறுககையு மற்றே

அதனால்-விழுமிய தறிமதி வாழி
கெழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே”
-இது சுரிதகம்.

இது,   நான்கடித்தரவும்     ஈரடித்தாழிசையாறும்   தனிச்சொல்லும்
ஆசிரியச்சுரிதகமுமாய் வந்தமையாற் பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.
  

“மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன்
றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால்
நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்ன
மிரைநயந் திறைகூரு மேமஞ்சா றுறைவகேள்.

மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும்
விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா
தெழுமுந்நீர் பெயர்ந்தோடு மேமஞ்சா றுறைவகேள்.
                                இவையிரண்டுந் தரவு.