கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோ டொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்; கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைஇய சிறுபுறத்தோ டெண்பனிகணுகக்கண்டுந் திரியலனே யென்றியால்; நீர்பூத்த நிரையிதழ்க்கண் ணின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால்; கனைவால்யாற் றிருகரைபோற் கைநில்லா துண்ணெகிழ்ந்து நினையுமென் னிலைகண்டு நீங்கலனே யென்றியால்; வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கல்லாத் தாழுமென் னிலைகண்டுந் தாங்கலனே யென்றியால்; கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைந்துணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்.
அதனால்-தனிச்சொல் [இவை யாறுந் தாழிசை. அடும்பம லிறும்பி னெடும்பணை மிசைதொறுங் கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு; செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர் நெறிதரு புரவியின் மறிதருந் திமில்; அரசுடை நிரைபடை விரைசெறி முரசென நுரைதரு திரையொடு கரைபொருங் கடல்; அலங்கொளி ரவிர்சுட ரிலங்கொளி மறைதொறுங் கலந்தெறி காலொடு புலம்பின பொழில். இவை நான்கும்அராகம். விடாஅது கழலுமென் வெள்வளையுஞ் செறிப்பாய்மன் கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ.
ஒல்லாது கழலுமென் னொளிவளையுஞ் செறிப்பாய்மன் நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ. தாங்காது கழலுமென் தகைவளையுஞ் செறிப்பாய்மன் நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ. மறவாத வன்பினேன் மனநிற்கு மாறுரையாய் துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய். காதலார் மார்பின்றிக் காமக்கு மருந்துரையாய் யேதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய். இனணபிரிந்தார் மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய் துணைபிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய். எனவாங்கு-தனிச்சொல். [இவையாறுந் தாழிசை. |