பக்கம் எண் :
 
48சிதம்பரப்பாட்டியல்

“அன்பீனு மார்வ முடைமை யதுவீனு
நண்பென்னு நாடாச் சிறப்பு.”

இது மெல்லினவெதுகை.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”

இஃது இடையினவெதுகை.

“ஆஆ என்றே.......ஒருசரார்” இது நெடிலெதுகை.

“நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப்
பாடுவண் டஞ்சி யகலும் பருவத்துத்
தோடார் தொடிநெகிழ்த்தா ருள்ளார்படலொல்லாப்
பாடமை சேக்கையுட் கண்

இது வருக்கவெதுகை.

இனி மோனைவருமாறு ; இவற்றுள், இனமோனை மூன்றாவன:-

“கயலே ருண்கண் கலுழ நாளுஞ்
சுடர்புரை திருநுதல் பசலை பாயத்
திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப்
போகல் வாழிய ரைய பூத்த
கொழுங்கொடி யணிமலர் தயங்கப்
பெருந்தண் வாடை வரூஉம் பொழுதே.”

இது வல்லினமோனை.

மெல்லினமோனையு மிடையின  மோனையும் வந்தவழிக்  கண்டுகொள்க.

“ஆர்கலி யுலகத்து” என்பது நெடின்மோனை.

“பகலே, பல்பூங் கானற் கிள்ளை யோப்பியும்
பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇப்
பின்னுப்பிணி யவிழ்ந்த நன்னெடுங் கூந்தல்
பீர்ங்கப் பெய்து தேம்படத் திருகிப்
புனையீ ரோதி செய்குறி நசைஇப்
பூந்தார் மார்ப புனத்துட் டேன்றாப்
பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப்
பேயு மறியா மாவழங்கு பெருங்காட்டுப்
பைங்க ணுழுவைப் படுபகை வெரீஇப்
பொருதுசினந் தணியாப் பூணுத லொருத்தல்
போகாது வழங்கு மாரிரு ணடுகாட்