இவ்வாசிரியத்துள் “உப்பிலா அ வவிப்புழுக்கல்” எனவும் “கைக்கொண்டு பிறக்குநோக்காது” எனவும், ”இழிபிறப்பினோ னீயப்பெற்று”எனவும், வஞ்சியடி விரவிவந்தவாறு கண்டுகொள்க. “குருகுவொண் டாளி கோடுபுய்த் துண்டென மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது மருள்பிடி திரிதருஞ் சார லருளா னாகுத லாயிழை கொடிதே.” இவ்வாசிரியத்துள்,” மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது, தீவழங்குசுழல்விழிக்கட் சீயஞ்சென் றுழலுமே” என உச்சரித்துக் கலியடியாமாறு கண்டுகொள்க. “நேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை.” என்னுமிவ்வஞ்சிப்பா ஆசிரிய அடியாயினவாறும். “வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மிலைந்து கயனாட்டக் கடைசியர்தங் காதலர்தோள் சேர்ந்தனரே.” எனக் கலியடியாமாறும் கண்டுகொள்க. வஞ்சிப்பாவினுள் வெள்ளடிவருமாறும், கலிப்பாவினுள் மற்று மூன்று பாவடியும் வருமாறும்“யாப்பருங்கலவிருத்தி” யுட் கண்டுகொள்க. தாழிசை, துறை, விருத்தம்என்றுசொல்லப்பட்ட நாலுபாவினங்களுந் தளைமயங்கி வருதற்கு உதாரணம் முன்னர்க் காட்டியவற்றுள்ளும், பிறவற்றுள்ளுங் கண்டுகொள்க. அனுமோனைக்கும், மெய்ம்மோனைக்கு முன்னர்க் காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் கண்டுகொள்க. இனவெதுகை மூன்றாவன;_ “தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும் .” இது வல்லினவெதுகை. |