பக்கம் எண் :
 
46சிதம்பரப்பாட்டியல்

லினவெதுகையென்றும்  இனமோனையென்றும், நெடிலெழுத்தே  வந்தால
நெடிலெதுகையென்றும்    நெடின்மோனையென்றும்,   வருக்கவெழுத்தே
வந்தால்   வருக்கவெதுகையென்றும்    வருக்கமோனையென்றும் பெயர்.
இனமென்றது,  வல்லின  மெல்லின மிடையினம். “யரலழ வொற்றாசிடை
யிட்டு யிரு மிரண்டடியுந், தயங்கிய   மூன்றாமெழுத்துமெதுகை”  எ-து,
“யரலழ வென்னு மீரிரண் டொற்று,வரன்முறை பிறழாது வந்திடை யுரப்பி,
னாசிடை யெதுகையென் றறியல் வேண்டும்”  எனக்   கண்டு   கொள்க.
இடையிட்டெதுகை   வந்தால்,  இடையிட்டெதுகையாம்.    எதுகையிலே
யுயிர்வந்தாலுயிரெதுகையாம்.      இவ்விரண்டடியொவ்வோர்    எதுகை
வந்தாலிரண்டடி   யெதுகையாம்.   மூன்றாமெழுத்தடிதோறும்  வந்தால்,
மூன்றாமெழுத்தொன்றெதுகையாம்.    “கடையிணை           பின்சார்
கூழையிடைப்புணரு   முரண்டொடைக்குஞ்        சாற்றே”     எ-து,
கடைமுரணுங் கடையிணை   முரணும்     பின்முரணுங்   கடைக்கூழை
முரணும் இடைப்புணர்முரணும் எனவரும். அவையாவன;_   நாலாஞ்சீர்
முரணுதல் கடைமுரண்.     நாலாஞ்சீரு    மூன்றாஞ்சீரு    முரணுதல்
கடையிணைமுரண்.  நாலாஞ்சீரு  மிரண்டாஞ்சீரு முரணுதல் பின்முரண்.
முதற்சீரொழித்த  மூன்றுசீருமுரணுதல் கடைக்கூழைமுரண்.இரண்டாஞ்சீரு
மூன்றாஞ்சீரு  முரணுத லிடைப்புணர்முரண்எனவரும்.இனியுதாரணம்;__

“அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
யேதின் மாக்களு நோவர் தோழி
யொன்று நோவா ரில்லைத்
தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே.”

இவ்வாசிரியத்துள், ”அங்கண்  மதிய   மரவின்வாய்ப்   பட்டெனப்,
பொங்கிய பூசல் பெரிது” என வெள்ளடியானவாறும்;_
  

“இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநில
முடையிலை நடுவணத் திடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட வேமங் காவல
ரிடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்த
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா
துடம்பொடு நின்ற வுயிரு மில்லை
மடங்க லுண்மை மாயமோ வன்றே