படிந்தமாக் களிறு பயிற்று மென்ப மடியாக் கொலைவில் லென்னையர் மலையே. இவ்வாசிரியத்துட் டன்சீரும் வெண்சீரும் வஞ்சிச்சீரும் விரவி வந்தவாறு கண்டுகொள்க. “மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரும் வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும்.” எனவும், “தொன்னலத்தின்” எனவும் வஞ்சிப் பாக்களுள்ளும் பிறவற்றுள்ளும், வெண்சீரும் தன்சீரு மாசிரியச் சீரும்விரவி வெண்டளையுந் தன்றளையுங் கலித்தளையு மாசிரியத் தளையும் மயங்கி வந்தவாறு கண்டுகொள்க. (1) |
எ-து. சூத்திரம். “மயங்குமடி யெப்பாவும் வெண்பாவுக் கன்றி” எ-து எல்லாப் பாக்களுக்கும் ஒருபாவிலடி ஒருபாவிற்புகமயங்கும்;வெண்பாவில், வேற்றுப்பாவினடி வாராது; “மன்னினமுந் தளையும்மயங்கிவரும்” எ-து, தாழிசை, துறை, விருத்தம் என்று சொல்லப்பட்ட நாலு பாவினங்கட்கும் இன்ன தளையென்னு நியமமில்லாமல்மயங்கிவரப்பெறும்; தளையுமென்ற உம்மையால் அடியுமயங்கப்பெறும்; “அஆஐஒள, நயங்கொள்ளும் இஈஎஏஉஊஒஓ, ஞணனநமவசத வெனுமோனை” எ-து, அஆஐஒள எனவும், இஈ எஏ எனவும்,உஊ ஒஓ எனவும், ஞணனந மவ எனவும் சத எனவும் வரும்; இவை தம்முள் ஒன்றுக்கொன்று அனுவாக வந்தமையாலனுமோனையாம்;“மெய்யுமோனை” எ-து, ஆதியிலே உயிர் நின்றாலும் மெய்நின்றாலும் நின்றவடியேமோனையாய் வரில ்மெய்ம்மோனையாம்.“இயங்குமினநெடில்வருக்கம் வரிலெதுகை மோனை” எ-து, இனவெழுத்தேவந்தா |