பக்கம் எண் :
 
44சிதம்பரப்பாட்டியல்

“அம்ம் பவள்ள் வரிநெடுங் கண்ணாய்வஞ்சிக்
கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கி
னரும்ம் பவண்முலை யொக்குமே யொக்குங்
கரும்ம் பவள்வாயிற் சொல்.”

“எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு.”
எனவும்,

ஒற்றளபெடை ஒருமாத்திரைபெற்று நேரசையாயினவாறு காண்க.

“அம்பொரைந்துடையகாமனையனென்னவந்தன
னம்புநீரரல்லர்நன்குரங்குநீரராயினுந்
தங்குரவ்வர் தாங்கொடுப்பினெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம்
பொங்கரவவல்குலாரெனப்புகன்றுசொல்லினார்”

என்பதனுள்,     “குரவ்வரென” ஒற்றில்லாதவிடத் தொற்றுண்டானது
கண்டு     கொள்க.     “பீலிமஞ்ஞை      நோக்கி”     என்பதனுள்
ஒற்றில்லாதுதோற்றின ஒற்றே அளபானது கண்டு கொள்க.
  

“கார்க்கடல்,   “பேய்க்குணவு”       என்பவற்றுள்    அந்நியமான
ஈரொற்று மோரொற்றாயினவாறு காண்க.
  

“உண்ணானொளிநிறான்”          எனவும்    “      அஅவனும்
இஇவணும்உஉவனுங் கூடியக்கால், எஎவனை வெல்வா ரிகல்” எனவும்,
  

“ஏவல்  குறிப்பே  தற்சுட்  டல்வழி,     யாவையுந்    தனிக்குறின்
முதலசையாகா” என்பதனால், முதற்கட்டனிக்குறில்   நேரசையாயினவாறு
காண்க.
  

“குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி
நிலாவணங்கு நேர்மணன்மே னின்று-புலாலுணங்கல்
கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மையோ நீபிற
ருள்ளம் புகாப்ப துரை.”

என்பதனுள், வெண்பா சீர்தளை சிதைந்தவாறு காண்க.

‘குடநிலைத்தண்புறவில்’    என்னுங்கலிப்பாவினுள்ளுமற்றுங்கொச்சகக்
கலிப்பாவினுள்ளுமாசிரியவுரிச்சீரும்,  வெண்சீரும்,  வஞ்சியுரிச்சீரும்வந்து,
வெண்டளையு   மாசிரியத்தளையுங்    கலித்தளையும்   வஞ்சித்தளையு
மயங்கிவந்தமை கண்டுகொள்க.
  

“நெடுவரைச் சாரற் குறுங்கோட்டுப் பலவின்
விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவ
னுண்டுசிலம் பேறி யோங்கிய விருங்கழை