பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்43

டளையொழிந்து   வேற்றுத்தளைவாராது;   மற்ற   மூன்றுபாக்களுக்கும்
எல்லாத் தளையுமயங்கியும் வழங்கும்; இவையாப்பருங்கலத்துட்காண்க.
  

“வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுது மியல்புமா - மேய்ந்த
விறுதி வருமெழுத்தா மீராறா மோரோர்
மறுவில் பதங்கெட்டு வரும்”.

இவ்வெண்பாவினுள்ளுங்  குற்றுகரந்தள்ளச் சீர்சிதையாது. “தடமண்டு”
என்பதனுட் குற்றுகரமொற்றலாதவாறு கண்டுகொள்க.
  

“பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றிலவா - னெல்லுக்கு
நூறோஓஓநூ றென்பா ணுடங்கிடைக்கு மென்முலைக்கு

மாறோமா லன்றளந்த மண்”
எனவும்,

“இடைநுடங்க வீர்ங்கோதை பின்றாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையி
னுப்போஓஓ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற்
கொப்போநீர் வேலி யுலகு”.

என்பவற்றில்,    நூறோ நூறெனவும், உப்போவெனவும், பண்டமாற்றின்
கண்வந்த    அளபெடையை    நீக்கி,   நெட்டெழுத்தாகவேகொள்ளச்
சீர்சிதையாது.
  

“அன்னையையா னோவ தவமா லணியிழாய்
புன்னையையா னோவன் புலந்து.”
எனவும்,

“பிறிந்த விருந்த பெருமா னுரையை
யறிந்தேன் மௌனமொழி யால்”
எனவும்,

ஐகாரக்குறுக்கமும்  ஒளகாரக்   குறுக்கமுங் குற்றெழுத்தானவாறுங்
காண்க.
  

“ஏஎர் சிதைய வழாஅஅ லெலாநின்
சேயரி சிந்திய கண்”
எனவும்,

“உறாஅஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு”
எனவும்,

ஓரளபெடையு மீரளபெடையும் வந்தவாறு காண்க.

“கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறுபொன்ன்
பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலா

லென்ன் பிறர்மகளா மாறு”.
எனவும்,