பக்கம் எண் :
 
42சிதம்பரப்பாட்டியல்

ஒழிபியல்.
 

11.ஆந்தளைசீர் கெடிலிகர வுகரத்தேய் வொற்று
   மாமலகு பெறாவளவை யௌக்குறுமைக் குறிலா
மேய்ந்தவுயி ரோரளபு மீரளபு மாகி
   யீரசையா மூவசையா மொற்றளபு குறினேர்
சேர்ந்தசையா மொற்றிலையே லொற்றாமொற் றளவாஞ்
   செறிவிலீ ரொற்றுமூ வொற்றுமொரொற் றாமுன்
சார்ந்தகுறில் விட்டிசைக்கி னேராம்வெண் பாவெண்
   டளையலது தயங்காது மயங்கிடுமெப் பாவும். 
                                             (1)

என்பது  சூத்திரம்.“ ஆந்தளைசீர்கெடிலிகரவுகரத்தேய்வொற்றுமாம்.”
என்பது,    தளையுஞ்சீருங்     கெடவந்தவிடத்துக்    குற்றயலிகரமுங்
குற்றியலுகரமும் ஒற்றாம்; உம்மையால ஒற்றல்லாமலுமாம்; “தளைசீர்கெடி”
லென்பதனை முதனிலைத்தீபமாக்கிக்கொள்க;    மேல்வருவனவற்றிற்கும்
ஒக்கும்.   ”அலகுபெறாவளவு” எ-து, உயிரளபெடை ஒரோவிடங்களிலே
நீக்கப்படும்.“ஐ    ஒளக்குறுமைகுறிலாம்”   எ-து,    ஐகாரக்குறுக்கமும்,
ஒளகாரக்குறுக்கமும் குற்றெழுத்தாம்; “ஏய்ந்தவுயிரோரளபு   மீரளபுமாகி
யீரசையாமூவசையாம்”  எ-து,  உயிரளபெடையானது,   ஓரளபெழுந்தால்
ஈரசையாம்; ஈரளபெழுந்தால் மூவசையாம்;“செய்யுட்க ளோசைசிதையுங்கா
லீரளபும்,   ஐயப்பா   டின்றி     யணையுமாம்-மைதீரொற்,  றின்றியுஞ்
செய்யுட்கெடினொற்றை    யுண்டாக்குங்,    குன்றுமே    லொற்றளபுங்
கொள்”     என்றார்  
பூதபுராணமுடையாரும்.    “ஒற்றளபுகுறினேர்,
சேர்ந்தசையாம்”    எ-து,  ஒற்றளபெழுந்தாற்  குற்றெழுத்தாம்;  அன்றி
முன்னின்றவெழுத்துடனேகூடி  நிரையசையாய்  நில்லாது குற்றெழுத்தின்
மாத்திரையைப்பெற்று,    நேரசையாகவேநிற்கும்,   “ஒற்றிலையேலொற்ற
மொற்றளபாம்”  எ-து,  ஒற்றில்லாதவிடத்து   ஒற்று    உண்டாக்கலாம்;
அந்தவொற்றிலு      மமைதிபிறவாதபோது      தோற்றினவொற்றையே
யளபாக்கலாம்; ‘மைதீரொற்றின்றியும் செய்யுட் கெடினொற்றையுண்டாக்குங்
-         குன்றுமேலொற்றளபுங்கொள்’      என்பதனுட்கண்டுகொள்க.
‘செறிவிலீரொற்று     மூவொற்றுமோரொற்றாம்’   எ-து,    அந்நியமாய்
ஈரொற்றுவந்தாலும்,   மூவொற்றுவந்தாலு   மோரொற்றாகவே   நிற்கும்;
“ஈரொற்றாயினுமூவொற்றாயினு, மோரொற்றியலவென்மனார் புலவர்”என்னு
மிதனுட்காண்க.      ‘முன்சார்ந்தகுறில்விட்டிசைக்கில்நேராம்,     எ-து,
ஆதியிலேவிட்டிசைத்துக்குற்றெழுத்துவந்தால             நேரசையாம்;
“வெண்பாவெண்டளையலதுதயங்காது     மயங்கிடுமெ்பாவும்”     எ-து,
வெண்பாவுக்கு வெண்