கொடியவாலன குருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தி னிணையரிமா னணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி யெயினடுவ ணினிதிருந் தெல்லார்க்கும் பயில்படுவினை பத்தியினாற் செப்பியோன் புணையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே. இது, “புணையென” என்னுந்தனிச் சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா. “தொன்னலத்தின்” என்பது, “பெரிதும்” என்னுந் தனிச்சொற்பெற்றது. இதுவுமது. மதப்பிடியை மதவேழந் தடக்கையான் வெயின்மறைக்கு மிடைச்சுர மிறந்தோர்க்கே நடக்குமென் மன்னேகாண்; பேடையை யிரும்போத்துத் தோகையான் வெயின்மறைக்குங் காடக மிறந்தோர்க்கே யொடுமென் மனனேகாண்; இரும்பிடியை யிகல்வேழம் பெருங்கையான் வெயின்மறைக்கு மருஞ்சுர மிறந்தோர்க்கே விரும்புமென் மனனேகாண்; இவை ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவந்தமையால் வஞ்சித்தாழிசை. “மைசிறந்தன மணிவரை கைசிறந்தன காந்தளும் பொய்சிறந்தனர் காதலர் மெய்சிறந்திலர் விளங்கிழாய்” என்பதும், “திரைத்தசாலிகை” என்பதும், இருசீர்நான் கடியாய்வந்த வஞ்சித்துறை. “சோலை யார்ந்த சுரத்திடைக் காலை யார்கழ லார்ப்பவும் மாலை மார்பன் வருமாயி னீல வுண்கணிவள் வாழுமே” என்பதும், “இருதுவேற்றுமையின்மையால்” என்பதும், இவை முச்சீர் நான்கடியாய்வந்த வஞ்சிவிருத்தம். (10) வஞ்சியினமுற்றும். |