பக்கம் எண் :
 
40சிதம்பரப்பாட்டியல்

“கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம்
பொய்தற் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்;
ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம்
மாசில் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்;
மென்றினை காத்து மிகுபூங் கமழ்கானற்
குன்றச் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்;”

இவை    யிரண்டடியா    யீற்றடி    மிக்கு     ஒருபொருண்மேன்
மூன்றடுக்கி வந்தமையாற் கலித்தாழிசை.
  

“வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி னெழா அல்வாழி வெண்டிங்காள்
கேள்வரும் போழ்தி னெழாதாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்.”

இஃதீற்றடி மிக்கு ஏனையடி மூன்று மொத்துவந்த கலித்தாழிசை.

“பூண்ட பறையறையப் பூதமருள
நீண்ட சடையா னாடுமே
நீண்ட சடையா னாடு மென்ப
மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே.”

இஃது   ஈற்றடிமிக்கு    இரண்டாம் அடி   குறைந்து    முதலடியும்
மூன்றாம் அடியுமொத்து வந்த கலித்தாழிசை.
  

“யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்
றேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற்
கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே”
எனவும்,
வென்றான் வினையின்”
எனவும்,

இவை ஐஞ்சீர் நான்கடியாய் வந்தமையாற் கலித்துறை.

“வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
னாய்தலி னொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
னீதலை சென்றுரை நீள்கடை காப்போய்”
எனவும்,

“தேம்பழுத்   தினியநீர்   மூன்றும்”    எனவும்,    நாற்சீரடியால்
வந்தமையால் கலிவிருத்தம்.
  

               இனிவஞ்சிப்பாவுக்குவரலாறு ;-

“பூந்தாமரைப் போதலமாத் ........”

இது     நாளென்னுந்     தனிச்சொற்    பெற்றுச்  சுரிதகத்தாலிற்ற
குறளடி வஞ்சிப்பா.