பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்39

எனவாங்கு,

அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்;
அவருந், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்
தொருபக லெல்லா முருத்தெழுந் தாறி
யிருவர்கட் குற்றமு மில்லையா லென்று

தெருமந்து சாய்த்தார் தலை;
தெரியிழாய் நீயுநின் கேளும் புணர
வரையுறை தெய்வ முவப்ப வுவந்து
குரவை தழீஇயா மாடக் குரவையுட்

கொண்டு நிலைபாடிக் காண்;
நல்லாய், நன்னா டலைவரு மெல்லை நமர்மலைத்
தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்;
புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி
னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ
கனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே

கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ;
விண்டோய்கன் னாடனு நீயும் வதுவையுட்
பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ
பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை

கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ;
மைதவழ் வெற்பன் மணவணி காணாமற்
கையாற் புதைபெறூஉங் கண்களுங் கண்களோ;
என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்;
நெய்த லிதழுண்கண், நின்கண்ணா தென்கண் மன்;

எனவாங்கு,

நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்
தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
வேய்புரை மென்றோட் பசலையு மம்பலு
மாயப் புணர்ச்சியு மெல்லா முடனீங்கச்
சேயுயர் வெற்பனும் வந்தனன்

பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே.”

இஃது        ஆசிரியத்தினோடும்      வெண்பாவினோடும்     வந்த
மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா.