பக்கம் எண் :
 
52சிதம்பரப்பாட்டியல்
புகரில்கண மெனப்பத்தும் பிறங்கு கேள்விப்
   புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர் செம்பொற்
சிகரகிரி யெனப்பணைத்துப் புடைத்து விம்மித்
   திரண்டெழுந்து வளர்ந்திளகிச் செறிந்த கொங்கைத்
தகரமலர்க் குழற்கருங்கட் குமுதச் செவ்வாய்ச்
   சரிவளைக்கைக் கொடியென்னத் தயங்கு மாதே.     (1)
 

(17) 

மாமணிதேர் புகழமுத மெழுத்துக் கங்கை
   மதிபருதி களிறுபரி யுலகஞ் சீர்நாள்
பூமலைகார் திருக்கடனீர் பழனம் பார்சொற்
   பொன்றிகிரி பிறவுமுதன் மொழிச்சீர்க் காகும்
நாமவகை யுளிசேர்தல் பொருள தின்மை
   நலமிலதாய் வைத்தல்பல பொருளாற் றோன்ற
லாமினிய சொல்லீறு திரிதல் போலு
   மாதிமொழிக் காகாவா னந்த மாமே              (2)
 

(18) 

ஆனவெழுத் தொன்பதே ழைந்து மூன்றாம்
   ஆகாதெட் டாறுநான் காதிச் சீர்க்கே
யூனமிலா அஆவும் இஈ ஐயும்
   உஊவும் எஏயும் ஒஓ ஒளவுந்
தானமிதை வகையாமந் தாதி தன்னிற்
   றலைவன்பேர் முதலெழுத்திற் பால னாதி
மேனிரையெண் ணிற்பால குமார ராசர்
   வேண்டிடும்வேண் டாவிருத்த மரணந் தானே.      (3)
 

(19) 

மருவுகுறி  லாணெடில்பெண்  ணவரி வர்க்கா
       மயங்கினுமாம் வரலாகாபேடொற் றாய்த
முரியகச தநபமவ வேழோ டாதி
       யுயிர்க்குறினான் கிவையமுத மாதிச் சீர்க்கும்
அரிய தசாங் கத்தயற்கு நலம தாகு
       மமுதமொழிக் கல்லாத வெழுத்துங் கான்மாத்
திரையளவஃ கேனமுடன் மூன்று நஞ்சாய்ச்
      செப்புமெழுத்திவையெல்லாந்தீதாமன்றே.       (4)