(20) | தீதிலுயி ரீராறு முதலொற் றாறுந் திருமறையோர்க் கடைவேயோ ராறு வேந்தர்க் கேதிலவ ரனக்கள்வணி கர்க்கா மற்றை யெழுத்துளவை சூத்திரர்க்கா மியன்ற சாதி யோதிமன்றன் படைப்புயிரே யரன்மால் செவ்வே ளும்பர்கோன் பருதிமதி மறலி நீர்க்கோன் காதலள கேசன்முத லிவ்வி ரண்டாய்க் கம்முதன்மூ வாறொற்றுங் கருதிச் செய்தார். (5) |
(21) | கருதுமுயி ரடைவேநான் கைந்து மூன்று கார்த்திகையே பூராட முத்தி ராட முரறருகவ் வரியினான் கிரண்டு மூன்று மூன்றோண மாதிரையே புனர்தம் பூச மிருமைகொள்சவ் வரியினான் கைந்து மூன்றி ரேவதியச் சுவனிபரணி ஞகர மூன்று வருமவிட்டந் தகரமிரண் டேழு மூன்று வளர்சோதி விசாகமே சதைய மன்னும். (6) |
(22) | சதிதிகழ்நவ் வினிலாறு மூன்று மூன்றுந் தருமனுடங் கேட்டையே பூரட் டாதி திதமிகுபவ் வரியினான் கிரண்டோ டாறுத் திரமுதன்மூன் றாமவ்வி லாறு மூன்று மிதமுடன்மூன் றும்மகமா யிலியம் பூர மியாவுத்தி ரட்டாதி யூயோ மூல முதவியவம் முதனான்கு மொழிந்த நான்கு முரோகணியா மிருகசீ ரிடமாம் பேர்நாள். (7) |
(23) | பேர்நாளுற் பவனாளா தன்மூ வொன்பான் பிறித்தொன்று மூன்றைந்தே ழாகா தெட்டாங் கூராசி யும்வயினா சிகமு மாகா குறில்வன்மை யீறொழிக்கில் வானோர்க் காகும் நேர்நெடிலின் முதல்நான்கீ றில்லா மென்மை நிலமக்கள் கதிமுதற்சீர்க் காகும் ஒஓ |