பக்கம் எண் :
 
60சிதம்பரப்பாட்டியல்
கழினிலங் கவன் றன்னை நினைந்து சுட்டா
   லீராறு திங்கடனி லிறுதி யாவன்
பகாடர்ந்துசெயா துளநொந்தாற் சுற்றத் தோடுந்
   தொலைவனிஃ துண்மையகத் தியன்றன் சொல்லே.    (19)
 

அகத்தியன்சொல் லெழுத்துமுதற் குற்றஞ் செய்யுட்
   கடையாமற் றொடைகொண்டா லடையுஞ் செல்வ
மகத்துயர்நோ யகலு மகலாது சுற்றும்
   வாணாளு மதிகம்வழி மரபு நீடுந்
தொகைக்குற்றம் பாட்டுறிற்செல் வம்போம் நோயாஞ்
   சுற்றமறு மரணமுறுஞ் சோருங் காலுஞ்
சகத்தவர்க்கீ தன்றியே தேவர்க் காகிற்
   றப்பாதிப் பலன்கவிதை சாற்றி னார்க்கே.        (20)
 

மரபியல் முற்றும்

ஆகக்கவி_46.  

சிதம்பரப்பாட்டியல் உரையுடன் முற்றும்.