பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்59

நீடுசந்தித் தொடர்ச்சிசுவை பாவந் தோன்ற
   நிகழ்த்திலம்ப முதற்பெருங்காப் பியத்து          (15)
 

(42)

அறையுமிதிற் சிலகுறைபா டெனினுங் குன்றா
   தறம்பொருளின் பம்வீட்டிற் குறைபா டாகப்
பெறுவதுகாப் பியமாகும் புராண மாகும்
   பேசின்முத னூல்பொருளோ டளவு தன்மை
செறிமிகுதி செய்வித்தோன் கருத்த னானுந்
   திகழுமிடு குறியானு நூற்குப் பேரா
முறுகலிவஞ் சிப்பாக்கை யறத்துக் காகா
   வுரைப்பதினி வாழ்த்தினுக்கெப் பாவு மாமே.       (16)
 

(43)

பாடுமுறை தொடர்செய்யு டெரிக்க வல்ல
   பாவலனற் குணங்குலஞ்சீ ரொழுக்க மேன்மை
நீடழகு சமயநூல் பிறநூல் மற்று
   நிகழ்த்துநூ லிலக்கணநாற் கவியுள் ளானாய்
நாடுறுப்பிற் குறைவிலனாய் நோயி லானாய்
   நாற்பொருளு முணர்ந்துகலை தெளிந்து முப்பான்
கூடும்வய திகழ்ந்தெழுப்பான் வயதி லேறாக்
   குறியுடைய னாகிலவன் கவிதை கொள்ளே.        (17)
 

(44)

கொள்ளுமிடம் விதானித்துத் தொடைய னாற்றிக்
   கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பந்
துள்ளுபொரி விளக்கொளிர முரசி யம்பத்
   தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த
வெள்ளைமலர்த் துகில்புனைந்து தவிசின் மேவி
   வேறுமொரு தவிசிருத்திச் செய்யுள் கேட்டே
யுள்ளமகிழ் பொன்புவிபூ ணாடை மற்று
   முதவியே ழடிபுலவ னுடன்போய் மீளே.           (18)
 

(45)

உடம்படச்செய் யான்செய்யுட் பிறர்பாற் கூறி
   லுற்றதிரு வவனிடைப்போ யொதுங்கு மன்றித்
திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித்
   தெருவுமயா னம்புற்று காளி கோட்டத்