பக்கம் எண் :
 
58சிதம்பரப்பாட்டியல்
 மகிழ்வாரகொள் வதுவெட்சி கரந்தை மீட்டல்
   மாற்றாந்பாற் செலல்வஞ்சி யூன்றல் காஞ்சி
பகர்மதிலைக் காக்குமது நொச்சி சுற்றிப்
   படைவளைத்த லுழிஞைபொரல் தும்பை வென்று
புகழ்படைத்தல் வாகையது மாலைப் பேராற்
   போற்றுவது மாலையுமாப் புகல்வர் தானை
யகலமுரைப் பதுதானை மாலை தூசி
   யணிவகுப்பிற் றாராகைமா லையைச்சொல் லாய்ந்தே
                                             (12)
 

(39) 

ஆய்ந்ததசப் பிராதுற்ப வம்பத் தான
   வரிபிறப்பா சிரியவிருத் தத்தால் வாழ்த்தில்
ஏய்ந்திடுநா ழிகைவெண்பா மன்னர்க் கீசர்க்
   கெய்தியநா ழிகைவெண்பா நாலெட் டாய்ச்சொல்
வாய்ந்தசெருக் களவஞ்சி களத்தைக் கூறல்
   வரலாற்று வஞ்சிபல வரலா றோதல்
பாய்ந்திடுமும் மதத்தானைத் தொழினேர் கொல்லும்
   படைக்களிற்றைக் கண்டரசன் பற்றிச் சேர்தல்.     (13)
 

(40) 

படைபுக்கா யிரவேழம் மெதிரார் போரிற்
   படப்போர்செய் தானுக்குகடைதிறப்புப் பாலைநிலங் காளி கோட்டங்க் கடவுள் வாழ்த்
   கழுதுநிலை காளிக்குப் பேய்ச்சொல் பேய்க்குத்
தொடர்காளி சொலலதனாற் றலைவன் கீர்த்தி
   சொல்லலவன் சேறல்புறப் பொருடோன் றப்போ
ரடுதல்களம் விரும்பலிவை நாற்சீ ராதி
   யடியிரண்டி லேறாமற் பாணி பாடே.             (14)
 

(41)

பாடுநெறி வணக்கம்வாழ்த் தொன்று நாலாய்ப்
   பகர்பொருண்முன் வரவிறைவன் வெற்பு வேலை
நாடுநகர் பொருள்பருவமிரு சுடர்பெண் வேட்டல்
   நண்ணன்முடி பொழில்புனலா டல்கள் ளுண்டல்
கூடுமகிழ் வூடறுனி புதல்வர்ப் பேறு
   கூறிடுமந் திரந்தூது செலல்போர் வென்றி