உலாவென்னும்
பிரபந்தம் பாடுவது; முடிபுனைந்த மன்னவருமாய்
இருபத்தொரு பிராயத்துக்கு உட்பட்டவர்களுக்கும் தேவர்களுக்கும்
உலாப்பாடலாம். அல்லாதவர்களுக்கு ஆகாது.
(கு - ரை.)
உலாவை உலாப்புறமென்றும் வழங்குவர். இங்கே
கூறப்பட்ட பிராயங்கள் வேறு நூல்களில் சிறிது மாறுபட்டும்
காணப்படுகின்றன.
(பி - ம்.)ம்.)
1 ஆதலைந் தேழ்பதி னொன்றுபன் மூன்றுபத்
தொன்பெனவே(21)
| |
மடல்
|
| |
|
|
47.
|
பொருளறம் வீடு பழித்தின்ப 1மேபொரு
ளாக்கிநல்லார்
2அருள்பெறு வேட்கை மடன்மிக வூர்தலிற்
3பாட்டுடையோர்க்
குரிதரு பேரிற் பெயருக் கிசைந்த எதுகையினால்
வருகலி வெண்பாத் தனைமட லாக வகுத்தனேர. |
(உரை I). எ - ன், மடலாமாறுணர்த்.........................று.
(இ - ள்.)
அறம் பொருள் வீடென்னும் மூன்றையும் பழி்த்துக் காமமே
பொருளாக அரிவையர் அருள் பெறும் வேட்கையினால் மடலூர்வலென்னும்
பொருள் பாட்டுடைத் தலைமகன் இயற்பெயராகிய அந்த எதுகை வகுத்து
ஆக்கிய கலிவெண்பாவை மடலென்றுரைப்பர் வண்டமிழ்ப் புலவர் எ - று.
(உரை II).
எ - து. அறம், பொருள், வீடு என்ற மூன்று
காரியங்களையும் பழித்து, இன்பமே பொருளாக்கி, இந்த இன்பத்துக் கிடமான
சிறப்பினையும் வைத்துப் பாட்டுடைத் தலைமகன் பேருக்கிசைந்த எதுகை
[யினாலே ஏதுவாக] வைத்துக் கலிவெண்பாவினாலே, தலைமனிரந்து
குறைபெறாது மடலேறுவதாய், ஈரடி யெதுகை வரப்பாடுவது மடலென்று
சொல்லப்படும் எ - று.
(கு - ரை).
இந் நூலைப் போலவே பிரபந்தத்திரட்டும் வச்சணந்தி
மாலையும் மடல் என்றே கூறும்; சில நூல்கள் வளமடல், உலாமடல்
|
|
|