(உரை
II). எ - ன், நயன விருத்தமும் பயோதர விருத்தமும்................
ஆசிரிய விருத்தம் பத்தாற்றான், கலித்துறை பத்தாற்றான்
நயனத்தைப்
புகழ்ந்தது நயனப் பத்தாம்; பயோதரத்தைப் புகழ்ந்தது பயோதரப் பத்தாம்.
ஊசலுறுப்பு வந்தன செய்து சுற்றத்தளவாம் கலித்தாழிசை பொன்னூச
லென்றவாறு.
(கு - ரை).
அரசர் விருத்தம் - ஆசிரிய விருத்தம்; ஆசிரியம்
அரசர்க்குரிய பா ஆதல் அறியத்தக்கது. பயோதரம் - பாலைத்தரித்துள்ளது;
நகில்; காரணக் குறி. சுற்றத் தளவாம் என்றது சுற்றம் பொலியச் சுகமொடு
வாழ்கவென்று கூறும் மரபுபற்றி என்க. இவ்வாசிரியர் ஊசல்
கலித்தாழிசையால் வரும் என்றாரேனும் பிறபாட்டியல்களின் ஆசிரியர்கள்
ஆசிரிய விருத்தத்தாலும் வரும் என்று கூறுவர். ஆடிரூசல், ஆடாமோ
ஊசல் என்ற தொடர்களில் ஒன்று ஈற்றில் அமைதலுண்டு. (25)
| |
அரசன்
விருத்தம்
|
| |
|
| 51.
|
*அரசன்
விருத்தங் கலித்துறை யீரைந் தகன்மலைமேல்
விரவிய நாடு நகர்சிறப் பாய விருத்தமுப்பான்
உரைசெய் கலித்தா ழிசையும்வாண் மங்கலம் ஓதுவது
புரவல ராயவர்க் காமென் றுரைப்பர் புலவர்களே. |
(உரை
II). எ - து பத்துக் கலித்துறையும், முப்பது விருத்தமும்,
கலித்தாழிசையுமாக மலை [கடல்] நாடு வருணனையும், நகர் வருணனையும்
[நிலவருணனையும்] பாடி, வாள்மங்கலமும் தோள் மங்கலமும் பாடி முடிப்பது
அரசன் விருத்தமென்னும் பிரபந்தமாம் எ - று. இது முடிபுனைந்த
மன்னர்க்குப் பாடுவது.
(கு - ரை).
அரசன் விருத்தத்தைப்பற்றிய குறிப்பு வெண்பாப்
பாட்டியல் முதலிய பழைய பாட்டியல்களில் இல்லை. பிரபந்ததீப ஆசிரியர்,
நவநீத நடனார் கூறியபடியே இப்பிரபந்த இலக்கணத்தைக் குறிக்கிறார்;
அரசன் விருத்தமே ஐயிரு கலித்துறை, விருத்தமுப்பான் வெண்கலித்
தாழிசை, இவற்றா லிறைவ னெழிலூர் மலை கடல், வாண்மங் கலந்திண்
டோள்மங் கலமுதல், வருணனை யெல்லாம் வகுத்துப் பாடலே என்பது அது.
(26)
|