பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 41

அமர்க்கள வஞ்சி என்பது செருக்கள வஞ்சி எனவும் வழங்கும் செருவில்
மாண்டாருடலையும், கரியுடல், பரியுடலையும் காகம், கழுகு, நாய், நரி, பேய்
முதலியவை தின்று களத்தாடும் சிறப்பைச் செப்பல் இதுவாம்.

     (பி - ம்.) 1 ‘பாதம் மயங்கும்வஞ் சிப்பாட்டி லாட வரைப்பரவி.’ 2
‘ஓதில’ 3 ‘னப்போது நால் வஞ்சி’   (23)


ஆனைத் தொழில்
   
49. பிறந்த நிலங்குல மோக்க மளவு பிராயமெழில்
சிறந்தமாக் கோபக் 1கிரமத்தில் விட்ட கதிர்சினத்தால்
இறந்துயிர் கோடல் செயக்கண் டிறைகந் தினிற்பிணித்தல்
உறைந்திடும் வஞ்சி யுரமுடை யானைத் தனித்தொழிலே

     (உரை I). எ - ன், ஆனைத் தொழிலாமா றுணர்த்...............................று.

     (இ - ள்). ஆனை பிறந்த தேசமும், அதன்குல நன்மையும், தனது
ஓக்கமும், அளவும், பிராயமும், கோபக்கிரமத்தால் அதனை நிலைநின்று
நீக்கியவாறும், அது சினமிகுதியாற் கொலை புரிந்தவாறும் கூறிப் பின்பு
அரசன் கந்தினை யணையெனச் சேர்த்தவாறும் உரைக்கும் வஞ்சி யானைத்
தொழிலாம் எ - று.

     (உரை II). எ - து...................ஆசிரிய விருத்தமாக முந்நூறு
பாடப்படுவது ஆனைவிருத்தமென்றவாறு.

     (கு - ரை). ஓக்கம்-உயர்ச்சி, கந்து - கட்டுத் தறி. இறந்து - வரம்பு
கடந்து. இறை - அரசன். மதங்கொண்டு திரியும் யானைகளை அடக்குதல்
மன்னர்க்குரிய சிறந்த லட்சணங்களுள் ஒன்றென்பது மணிமேகலை,
பெருங்கதை, சீவகசிந்தாமணி
முதலிய நூல்களால் தெரிய வரும்.

     (பி - ம்.) 1 ‘கிரமத்தி லெட்டாங்கத் துச்சினத்தால்’ (24)

நயனப்பத்து, பயோதரப்பத்து, பொன்னூசல்
   
50. +அரசர் விருத்தங் கலித்துறை யீரைந்து கண்மூலைமேற்
பரசி னயனம் பயோதரஞ் சேர்ந்த விருத்தமென்ப
வரன்முறை சுற்றத் தளவாம்பொன் னூசல் வடிவுதுற்றே
உரைசெய் கலித்தா ழிசையேபொன் னூசலென் றோதுவரே.