பக்கம் எண் :
 
1

வீ ர சோ ழி ய ம்

பா யி ர ம்

கட்டளைக் கலித்துறை

1.

மிக்கவன், போதியின் மேதக்

கிருந்தவன், மெய்த்தவத்தால்

தொக்கவன், யார்க்குந் தொடரவொண்

ணாதவன், தூயனெனத்

தக்கவன் பாதந் தலைமேற்

புனைந்து தமிழுரைக்கப்

புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி

மன்புத்த மித்திரனே.


2.

 ஆயுங் குணத்தவ லோகிதன்

பக்க லகத்தியன் கேட்

டேயும் புவனிக் கியம்பிய

தண்டமி ழீங்குரைக்க

நீயு முளையோ வெனிற்கரு

டன்சென்ற நீள்விசும்பில்

ஈயும் பறக்கு மிதற்கென்

கொலோசொல்லு மேந்திழையே.


3.

 நாமே வெழுத்துச்சொ னற்பொருள்

யாப்பலங் காரமெனும்

பாமேவு பஞ்ச வதிகார

மாம்பரப் பைச்சுருக்கித்

தேமே வியதொங்கற் றேர்வீர

சோழன் றிருப்பெயராற்

பூமே லுரைப்பன் வடநூன்

மரபும் புகன்று கொண்டே.