தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மும்மணி

திவான் பகதூர் ச. பவானந்தம் பிள்ளையவர்களைப் பற்றிக்
கா. ர. கோவிந்தராஜ முதலியாரவர்கள்
பாடிய

மும்மணி

கட்டளைக் கலித்துறை

தொக்கார்ந் தவிரு மருநூல்க

டம்மகந் தோய்ந்தநுட்பம்

புக்கார்ந் தறியும் வளவான்

புலத்தின் பொலிதருவோன்

மைக்கார்க் கடலையும் பாற்கட

லாக்கும் வளப்புகழெண்

டிக்கார்ந் தவிரும் பவானந்த

னென்றுரை சீரியனே.

(1)

கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டின்

யாமே கனமுடையோம்

எம்மாண்பு கொண்டா ரிலையென்று

கொள்ளே லெழின்முகிலே !

செம்மாண்பு கொண்ட புலத்தோர்கள்

போற்றச் சிறந்துளனால்

மெய்ம்மாண்பு கொண்ட பவானந்தன்

றானுமிம் மேதினிக்கே.

(2)

ஐந்தரு மாண்பில வானகத்

துள்ளன வாதலின்வான்

வந்தெழு மேகமு மாண்பில

தாஞ்சேண் வதிதரலான்

முந்துற நாவலர் தம்மரு

குற்று முகமனுரை

தந்திடு நல்லான் பவானந்தன்

காண்மாண்பு சார்ந்தவனே.

(3)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:21:53(இந்திய நேரம்)