முடிக்க. இவற்றைச் சிறப்பிக்கக் கருதின பொழுதுவர் என்னும் பிரத்தியங் கொடுக்க. இவை எட்டையும் பன்மையாக்கக் கருதின போது கள்வர்கள் என்னும் இரண்டு பிரத்தியங் கொடுத்து முடிக்க (எ-று.)
வரலாறு:- உன், என், தன் என்பன சுப்பிரத்தியத்தோடு சேர்ந்து நீ, நான், தான் என வரும்.
உன் என்பதற்கு நும் என்பதும், நின் என்பதும், நான் என்பதற்கு யான் என்பதும் ஆதேசமாம்.
யா முதலியன யாவன், அவன், இவன், உவன், எவன் எனவும்;
யாவள், அவள், இவள், உவள், எவள் எனவும்;
யாது, அது, இது, உது, எது எனவும்;
யாவை, அவை, இவை, உவை, எவை எனவும் வரும்.
அது, இது, உது, எது என்பன அஃது, இஃது, உஃது, எஃது என ஆதேசமாம்.
சிறப்பில் முன்னின்ற மூன்றும் நீர், நாம், தாம் எனவும்; பின்னின்ற ஐந்தும் யாவர், அவர், இவர், உவர், எவர் எனவும் வரும்.
நாம், யாம் எனவும்; யாவர், யார் எனவும் ஆதேசமாதலுமாம்.
பன்மையில் நீர்கள், நீங்கள், நாங்கள், தாங்கள் எனவும்;
யாவர்கள், அவர்கள், இவர்கள், உவர்கள், எவர்கள் எனவும் வரும்.
நீர்கள் என்பது நீயிர்கள், நீவிர்கள் என ஆதேசமாதலுமுண்டு.
நீர் என்பது நீயிர், நீவிர் என ஆதேசமாம்.
நாங்கள் என்பது யாங்கள் என ஆதேசமாம்.
இவையெல்லாம் எழுவாய் வேற்றுமை உருபாகக் கண்டு கொள்க.
'முதல் வேற்றுமையின் உருவம் விளி வேற்றுமை யொழித்தெங்கு முறப்பெறுமே' என்பதனால்,
உன்னை, என்னை, தன்னை, அவனை, இவனை, உவனை - எவனை எனவும்;
உம்மை, எம்மை, தம்மை எனவும்;
யாவரை, அவரை, இவரை, உவரை, எவரை எனவும்;
உங்களை, எங்களை, தங்களை எனவும்;
இரண்டாம் வேற்றுமையோடு கூட்டி முடிக்க.
உங்களை என்பது நுங்களை என ஆதேசமாம்.