பக்கம் எண் :
 
39

உன்னால், என்னால், தன்னால் எனவும்; உன்னோடு, தன்னோடு, என்னோடு எனவும்; யாவனால், யாவனொடு எனவும் மூன்றாம் வேற்றுமையோடு கூட்டி முடிக்க. ஒழிந்தனவுமிவ்வாறே வரும். இவை முடிக்குமிடத்துச் சாரியைச் சொற்களையும் விகாரங்களையும் வருமிடம் அறிந்து வருவித்து முடிக்க. உன், என்னுஞ்சொல் முன்னிலைச் சொல்லேயாயினும், இவற்றுடன் கூட்டிமுடிக்கப் படுதலால் விளிவேற்றுமைக்கு உரித்தன்று என்க. வன், வர், சு என்னும் பிரத்தியங்கள் வந்தால் எண்ணுப் பெயரில் மரபு பிழையாமல் முடிக்க.

அவை வருமாறு:- ஒன்றென்பது ஒருவென ஆதேசமாகி வன் என்னும் பிரத்தியத்தோடு ஒருவன் எனவும், வர் என்னும் பிரத்தியத்தோடு ஒருவர் எனவும் வரும். இப்பிரத்தியம் மற்றை எண்களோடு இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர் எனவரும். ஒன்று, இரண்டு, மூன்று என்பன சுப்பிரத்தியத்தான் முடியும்.

(9)

வேற்றுமைப்படலம் முற்றும்.