பக்கம் எண் :
 
40

2. உபகாரகப் படலம்1

38. கருத்தாக் காரகமுதலிய காரகங்கள் இவையாம் என்பது.

மேதகு நற்றொழில் செய்வான் கருத்தா; வியன்கருவி
தீதில் கரணம்; செயப்பட்ட தாகுந் திறற்கருமம்;
யாதனி னீங்கு மவதிய தாம்;இட மாதாரமாம்;
கோதறு கோளிமன் கொள்பவ னாகுங் கொடியிடையே!

(இ-ள்.) முன் சொல்லிப் போந்த ஆறு காரக பதங்களுமாமாறு:- யாதொரு தொழிலைச் செய்வானெவன், அவன் கருத்தாக் காரகமாம்; அத்தொழிலினைச் செய்தற்குக் கருவியாயிற்று யாது, அது கரணக் காரகமாம்; யாதொன்று செய்யப்பட்டது, அது கருமக் காரகமாம்; யாதொன்றினின்றும் ஒரு பொருள் நீங்குவது, அஃது அவதிக் காரகமாம்; யாதொன்று ஒரு தொழில் செய்தற்கு இடமாயிற்று, அஃதாதாரக் காரகமாம்; யாவனொருவன் ஒரு பொருளைக் கொள்வான், அவன் கோளிக் காரகமாம்(எ-று.)

'கொடியிடையே !' என்பது மகடூஉ முன்னிலை.

(1)

39. காரகங்கள் ஆறுக்கும் உதாரணம்

வரைநின் றிழிந்தங்கொர் வேதியன் வாவியின் கண்மலிந்த
விரைநின்ற பூவைக் கரத்தாற் பறித்து விமலனுக்குத்
துரைநின்ற தீவினை நீங்கவிட் டானென்று சொல்லுதலும்
உரைநின்ற காரக மாறும் பிறக்கும் ஒளியிழையே !

(இ-ள்.) 'வரை நின்று இழிந்தங்கொர் வேதியன்' என்பதில் 'யாதனினீங்கு மவதியதாம்' என்பதனால், அந்தணனை நீக்கப்பட்ட மலை அவதிக் காரகமாயிற்று; 'அங்கொர் வேதியன் பூப்பறித்திட்டான்' என்பதில் 'மேதகு நற்றொழில் செய்வான் கருத்தா' என்பதனால், வேதியன் கருத்தாக் காரகமாயினான்; 'வாவியின்கண்' என்பதில் 'இட மாதாரம்' என்பதனால், பூப்பறித்தற்கு இடமாகிய வாவி ஆதாரக் காரகமாயிற்று; மலிந்த விரைநின்ற பூவை என்பதில் 'செயப்பட்டதாகுந் திறற்கருமம்' என்பதனால், பறித்திடப்பட்ட பூ, கருமக் காரகமாயிற்று; 'கரத்தாற் பறித்து' என்ப


1. இது முற்கூறிய வேற்றுமைப்படலத்துக்கு உதவியாகிய பொருள்களைக் கூறும் படலம் என்றாம் .( உபகாரகம் - உதவியைச் செய்வது.)