'நன்மையினின்று பிழைத்தான்' என்புழி, கரணக் காரகம் ஐந்தாம் வேற்றுமையால் வந்தது.
'செவியினுக்குக் கேட்கலாம்' என்புழி, கரணக் காரகம் ஆறாம் வேற்றுமையால் வந்தது.
'பொன்னோடு வெள்ளியிட்டது' என்புழி, கோளிக் காரகம் மூன்றாம் வேற்றுமையால் வந்தது.
'சாத்தனுக்குக் கொடுத்தான்' என்புழி, கோளிக் காரகம் நாலாம் வேற்றுமையால் வந்தது.
ஆறாம் வேற்றுமையில் வரும் கோளிக் காரகம் வடமொழியிலல்லது இல்லை.
'மரத்தினின்றும் விழுந்தான்' என்புழி, அவதிக் காரகம் ஐந்தாம் வேற்றுமையால் வந்தது.
'எள்ளில் எண்ணெய் நின்றது' என்புழி, ஆதாரக் காரகம் ஏழாம் வேற்றுமையால் வந்தது.1
(6)
உபகாரகப்படலம் முற்றும்.
1. 'வேற்றுமை மயக்கம் வரை கூறற்பாலதன்று.
'யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.'
என்றார் முனிவரர் மூவரும்.
'ஒன்று மூன்றுநான் காறெனு முருபொடு'
எனக் கூறப்புகுந்த பின்னூலாரும்
'மாறுபட நிற்றல் வரம்பிலை என்ப'
என்றே முடித்தனர்' என்பது பழைய குறிப்பு.