நகரத்து மாளிகைகளை, எரி மேவுமது இயம்ப வேண்டுமோ - எரி கவருதல் சொல்ல வேண்டுமோ?, வல்லி அம் தாமரை - வல்லியோடு கூடிய அழகிய தாமரைகளையுடைய, வனங்கள் ஆயின - நீர்த்தடாகங்கள் ஆயின எல்லாம், வல்லியம் - புலியையும், தா மரை - தாவும் மரைகளை (மான்களை)யும் உடைய, வனங்கள் ஆயின - காடுகள் ஆயின எ - று. இதில் 'வல்லியந் தாமரை வனங்க ளாயின' என்ற சொற்றொடர் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் மடங்கி வருதல் காண்க. (வி - ரை)வனம் - நீர்த்தடம், காடு. (6) இரண்டாமடியும் ஈற்றடியும் மடக்கு எ - டு : | 'நலத்தகை பெறவிரு சரண மோதுநம் | | குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே | | நலத்தகை மகளொரு பாக நண்ணுமேல் | | குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே' |
இ - ள் : நலத்தகை பெற - நலமிகுதி பெற வேண்டி, இரு சரணம் ஓதும் - இரண்டு சீர்ப்பாதத்தையும் ஏத்தும், நம் குலத்த - நமது குலத்துள்ளார், கை - கைகளை, பணிகொள் - தொழில் கொள்ளும், ஏகாம்பரத்தன் - ஏகாம்பரத்தையுடையான், நலம் தகை - நன்மை மிக்க, மகள் - தலைமகளை, ஒரு பாகமாக நண்ணுமேல் - ஒரு பாகத்திலே சேர்க்கும், குலம் தகை - குலத்தான் மிக்க, பணிகொள் ஏக அம்பரத்தன் - பாம்பாற் புனையப்பட்ட ஒற்றை ஆடையை யுடையான் எ- று. ஏகாம்பரன் - தனி மாவை உடையான். இதில், ‘குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே’ என்ற சொற்றொடர், இரண்டாமடியிலும் ஈற்றடியிலும் மடங்கி வருதல் காண்க. இவை ஆறும் ஈரடி மடக்கு. இனி, மூன்றடி மடக்கு வருமாறு:- (1) ஈற்றடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு எ - டு : | 'காம ரம்பயி னீரம துகரம் | | காம ரம்பயி னீரம துகரம் | | காம ரம்பயி னீரம துகரம் | | நாம ரந்தை யுறனினை யார்நமர்' |
இ - ள் : கா - சோலையில், மரம் பயில் நீர - மரந்தொறும் நெருங்கின, மதுகரம் - வண்டினமானவை, காமரம் பயில் நீர - காமரம் என்னும் இசையைப் பாடாநின்றன, மது கரம் - தேன் பொழியும், காமர் அம்பு - மதவேள் அம்பு, அயில் நீர - வேற் செய்தியை யுடையவாயின, மது - வேனிற்காலத்து, கரம் - எதிர்ப்பட்ட, நாம் அரந்தையுற - நாம் துயருழப்பவும், நினையார் நமர் - நினையாதொழிந்தார் நம் காதலர் எ- று. மது - வேனிற்காலம். கரம் - எதிர்ப்படல். இதில் 'காம ரம்பயி னீரம துகரம்' என்ற சொற்றொடர், ஈற்றடி யொழிய மற்றைய மூன்றடிகளிலும் மடங்கி வந்தமை யுணர்க.
|