பக்கம் எண் :
 
196தண்டியலங்காரம்

(2) முதலடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு

எ - டு :

'வரிய வாங்குழல் மாத ரிளங்கொடி
அரிய வாங்கய தானவ னங்களே
அரிய வாங்கய தானவ னங்களே
அரிய வாங்கய தானவ னங்களே'

இ - ள் : வரி அவாம் - வண்டுகள் விரும்பும், குழல் மாதர் இளங்கொடி - அளகத்தையுடைய காதல் இளங்கொடியே! அரிய - அடைதற்கரிய, ஆங்கு - அவ்விடத்தும், அயது ஆன - பள்ளத்தில் உண்டான, வனங்கள் - புனல்களாவன, அரி - வண்டுகள், வாம் கயம் - தாவப்படாநின்ற யானையினது, தான வனங்களே - மதசலங்களே, அரி - சிங்கங்கள், அவாம் - உலாவும், கய - பெரிய, தான வனங்கள். இடத்தோடு கூடிய காடுகளில் எ - று.

அயம் - பள்ளம். கய - பெரிய. இதில் 'அரிய வாங்கய தானவ னங்களே' என்ற சொற்றொடர், முதலடி யொழிய மற்றைய மூன்றடிகளிலும் மடங்கி வந்தமை யுணர்க.

(வி - ரை) இது தோழி தலைமகட்குச் சுரத்தியல்பு கூறியதாகும். மூன்றாமடியில் உள்ள அரிய என்பதை அரி + அ எனப் பிரித்து அகரத்தைச் சாரியையாகக் கொள்க.

(3) இரண்டாமடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு

எ - டு :

'கடிய வாயின காமரு வண்டினம்
அடிய வாவகன் றாருழை வாரலர்
கடிய வாயின காமரு வண்டினம்
கடிய வாயின காமரு வண்டினம்'

இ - ள் : கடியவாயின - விளக்கமுடையவாய, காமரு - அழகு பெற்ற, வண்டினம் - வளைகள், அடிய ஆ - (கழன்று) அடியிலே விழக்கண்டும், அகன்றார் - நம்மைப் பிரிந்தவர், உழை வாரலர் - நம்மிடத்து வந்திலர், கடி அ வாயின - நறு நாற்றத்தை விரும்பா நின்றன, காமரு - சோலைகளில் பயிலுகிற, வண்டு இனம் - வண்டின் கூட்டங்கள், கடிய ஆயின - அஞ்சத்தகுவன வாயின, காமரு - அழகுடன் புணர்ந்த, வண் தினம் - வளவிய நாட்கள் எ - று.

இதில் 'கடிய வாயின காமரு வண்டினம்' என்ற சொற்றொடர், இரண்டாமடி யொழிய மற்றைய மூன்றடிகளிலும் மடங்கி வருதல் காண்க.

(4) மூன்றாமடி யொழித்து ஏனை மூன்றடியும் மடக்கு

எ - டு :

'கோவ ளர்ப்பன கோநக ரங்களே
கோவ ளர்ப்பன கோநக ரங்களே
மேவ ளக்கர் வியன்திரை வேலைசூழ்
கோவ ளர்ப்பன கோநக ரங்களே'

இ - ள் : கோ வளர்ப்பன - ஒளியை மிகுப்பன, கோ நகரங்கள் - தலைமையையுடைய நகரங்கள், கோ - சோழன், வளர்ப்