இ - ள் : மாலையாக - ஒழுங்காக, வெய்து - வெய்து, அனங்கவேள் - மாரன் ஆயுதம், பயில் தருமாலை - பயிலுமிடம், மாலை வேட்டவர் - அரியைக் (திருமாலைக்) காதலித்தவருடைய, மனங்கொலோ - உள்ளம் போலும், அவன் துழாய் மாலை - அவனுடைய துளவ மாலை, மாலை ஓவு உடைத்து - சேர்தற்கு அருமையுடைத்து, நினைந்து - அதனை நினைந்து, எழுதரும் மாலை - எழும் உள்ள மயக்கத்தை, மாலைஆ வுடையவரை - இயல்பாகவுடையவரை, வந்து - வந்து, இடர் செயும் மாலை - துயரம் உறுவிக்கும் அந்தியம்பொழுது எ - று. இதனைச் 'சந்தட்டய மடக்கு' மென்ப; அல்லது இடையிட்டு முதலும் இறுதியும் மடக்கிய முற்று மடக்கு எனலுமாம். (வி - ரை)முதலடியின் இறுதியில் வந்த மாலை என்னும் சொல் அடுத்த அடியின் ஆதியாகவும், அங்ஙனமே ஏனைய அடிகளிலும் மடங்கி வந்திருத்தலின், இது அந்தாதி மடக்காம். இதன்கண் 'மாலை' என்னும் சொல் எட்டு முறை மடங்கி வருதலின் இதனைச் சந்தட்டய மடக்கு என்பர். அடிதொறும் மாலை யென்னும் சொல், இடையிட்டு முதலும் இறுதியுமாக மடங்கி வருதலின், இதனை 'இடையிட்டு மடங்கிய முற்றுமடக்கு' என்றும் கூறுவர். அந்தாதி மடக்கு (வேறுவகை) எ - டு : | 'கயலேர் தரவருங் கடிபுனற் காவிரி | | காவிரி மலருகக் கரைபொரு மரவம் | | மரவம் பூஞ்சினை வண்டொடுஞ் சிலம்பும் | | சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே' |
இ - ள் : கயல் - கயல்கள், ஏர்தரவரும் - அழகு பெற வரும், கடிபுனல் காவிரி - விரைந்த புனலையுடைய காவிரியாறு, கா - சோலையில், விரிமலர் உக - விரிந்த மலர்கள் உகும்படி, கரை பொரும் அரவம் - கரையைப் பொரும் அரவமானது, மரவம் பூம் சினை - பிடா மரத்தில் உண்டான பூங்கொம்புகள், வண்டொடும் சிலம்பும் - வண்டோடு கூடி ஆர்ப்பெடுக்கும், சிலம்புசூழ் - சிலம்பாற் சூழப்பட்ட, தளிர் அடி - தளிர்போலும் அடியினை யுடையாள், திருமனைக்கு அயலே - செல்வ மனைக்கு அருகு எ - று. (வி - ரை)இது தலைவற்குத் தோழி குறியிடங் கூறியதாகும். இப்பாடற்கண் ஒவ்வோர் அடியின் இறுதியும், அடுத்த அடியின் ஆதியாகத் தொடுக்கப்பட்டு வருதலின், இது அந்தாதி மடக்கு ஆயிற்று. சென்ற பாடலில் ஒரு சொல்லே எல்லா அடியிலும் அந்தாதியாகத் தொடுக்கப்பட்டது. இப்பாடலில் அடிதொறும் வெவ்வேறு சொற்கள் அந்தாதியாக வந்துள்ளன. இவை தம்முள் வேற்றுமை. (5)
|