இடையிட்டு வந்த பாடக மடக்கு எ - டு : | 'கலைநி லாவரு மாலைம ணங்கொள்வான் | | மலைய மாருத மாறல மாதர்கண் | | கலைநி லாவரு மாலைம ணங்கொள்வான் | | மலைய மாருத மாறல மாதர்கண்' |
இ - ள்: கலை நிலா - கலை(ஆடை) நில்லாத, அருமாலை - அரிய அந்திப்பொழுதில், மணங் கொள்வான் - புணர்ச்சியை வேண்டி, மாதர் கண் - காதலோடு கூடிய கண், மலைய மாருதம் - மிகவும் அழுகை, மாறல - நீங்காது; கலை நிலா வரும் - மதியின் கண் உண்டாகிய நிலவு எழும், மாலை - தொடையலின், மணங் கொள்வான் - வாசங் கொள்ள வேண்டி, மலைய மாருதம் - தென்றலானது, மாறல - நீங்காது, மாதர்கண் - இவளுழை எ - று.(வி - ரை)இப்பாடற்கண் முதலடி மூன்றாமடியாகவும், இரண்டாமடி நான்காமடியாகவும் மடங்கி வந்தமையின் இடையிட்டு வந்த பாடக மடக்காயிற்று. இரண்டாம் அடியிலுள்ள மலையமாருதம் என்ற சொல் தென்றலைக் குறிக்குமேனும், ஈண்டு ஆகுபெயராய் அதனால் விளைந்த அழுகையைக் குறித்தது. இதுவுமது எ - டு : | 'ஓத நின்றுல வாவரும் வேலைவாய் | | மாத ரங்க மலைக்கு நிகரவே | | ஓத நின்றுல வாவரு வேலைவாய் | | மாத ரங்க மலைக்கு நிகரவே' |
இ - ள் : நின்று ஓத - நின்று சொல்ல, உலவா - முடிவில்லாத, அரும் வேலைவாய் - அரிய காலத்தின்கண், மாதர் - இவளுடைய, அங்கம் - அவயவங்களை, அலைக்கும் நிகரவே - அழிக்குமாறு பட்டன, ஓதம் நின்று - நீர் நிலைபெற்று, உலவா வரு - உலவி வருகின்ற, வேலைவாய் - கடலில், மா தரங்கம் - பெரிய திரைகள், மலைக்கு நிகரவே மலைக்கு ஒப்பாக இருக்கும் எ - று. (வி - ரை)இதன்கண் முதலடி மூன்றாமடியாகவும், இரண்டாமடி நான்காமடியாகவும் மடங்கி வந்தமையின், இது இடையிட்டு வந்த மடக்காயிற்று. இனி, அந்தாதி மடக்கு வருமாறு :- அந்தாதியாவது, ஓரடியின் அல்லது செய்யுளின் ஈற்றில் வருஞ்சொல், அடுத்த அடியின் அல்லது அடுத்த செய்யுளின் முதலில் வருவது. அந்தம் ஆதி என்பன அந்தாதி என்று ஆயது. அந்தம் - ஈறு; ஆதி - முதல்; அந்தமே முதலில் வருவது என்பது இதன் பொருள். அந்தாதி மடக்கு எ - டு : | 'மாலை யாக1வெய் தனங்கவேள் பயில்தரு மாலை | | மாலை வேட்டவர் மனங்கொலோ அவன் துழாய் மாலை | | மாலை யோவுடைத் ததுநினைந் தெழுதரு மாலை | | மாலை யாவுடை யவரைவந் திடர்செயு மாலை' |
1. 'வெய் யனங்கவேள்' என்பதும் பாடம்.
|