பக்கம் எண் :
 
சொல்லணியியல்199

கொண்டற் போது மருங்கடலே!

கொண்டற் போது மருங்கடலே

வீடா விருப்புக் காப்புள்ளே

வீடா விருப்புக் காப்புள்ளே

வீயுந் துயர முண்டகமே

வீயுந் துயர முண்டகமே!

நாடா மேகாம் பரத்தருவி

நாடா மேகாம் பரத்தருவி

நற்காஞ் சிவனத் தானத்தான்

நற்காஞ் சிவனத் தானத்தான்

சூடா மலர்க்கண் டலந்தேனே!

சூடா மலர்க்கண் டலந்தேனே!

சுற்ற மலைவாய்த் தவராலே!

சுற்ற மலைவாய்த் தவராலே!

இ - ள் : கோடு ஆர் - கரை பொருந்திய, ஆவி - தடத்தின் கண், குருகே - குருகுகாள்!, கோள் தாரா -கொள்ளுதற்குப் பிடிப்பற்றன, இப்பால் குருகு - இப்புறம் வளைகள்; கொண்டல் மேகம், போதும் - முகக்கும், அருங்கடலே - அரிய கடலே!, கொண்டல் போதும் - கீழ்க்காற்றே போதும், மருங்கு அடலே - பக்கத்து நின்று துன்புறுத்தற்கு; கா வீடு ஆ - காடே வீடாக, இருப்பு புள்ளே - இருக்கும் புட்குலமே!, வீடா விருப்பு - நெகிழாது ஆசைக்கட்டு, காப்பு உள்ளே - மனத்தின்கண்; வீ உந்து உயர் - மதுகரம் அலைக்கும் உயர்ந்த, அம் முண்டகமே - அழகிய தாமரையே!, வீயும் துயரம் - சாதல் துயரம், உண்டு அகம் - உண்டு மனையில் உள்ளோரால்; நாள் தாம் - உடுக்குலம் தாவும், அம்பரத்து மேகம் - ஆகாயத்து உலவும் மேகத்தாலுண்டான, அருவி நாடு ஆம் - அருவியையுடைய நாட்டில் உண்டாம், ஏகாம்பரத் தருவின் - ஒரு மாமரத்தினுடைய, நல் காஞ்சி வனம் தானத்தான் - அழகிய காஞ்சி வனத்தினையுடையான், நற்கு ஆம்சிவன் - நஞ்சையுண்டான் சிவன், நத்தான் - நந்து (சங்கு) ஏந்திக்கு (திருமாலுக்கு), அத்தான் - அத்தான்; சூடா மலர்க்கண் தலம் - வனையாத தாழை மலரின்கண் உள்ள, தேனே - தேனீக்காள்!, சூடு ஆம் - சுடுதலை யொத்த, அலர்கண்டு - அயலார் அலர் தூற்றுதலைக் கேட்டு, அலந்தேன் - எய்த்தேன்; சுற்று அம் அலை வாய்த்த - சூழ நீர்த்தரங்கத்திலுள்ள, வரால் - வரால் மீன்களே!, சுற்றம் மலைவு ஆய்த்து - உறவு பகையானது, அவரால் - அந்தத் தலைவரால் எ - று.

(வி - ரை)இது, காம மிக்க கழிபடர் கிளவியால் தலைவி கூறியது. நற்கு ஆம் சிவன் - நன்மையை யுண்டாக்கும் சிவபெருமான். அடியவர்க்காகக் காய்சின ஆலமுண்டவன் ஆதலால் 'நற்கு ஆம் சிவன்' என்றார். சிவபெருமான் உயிர்களுக்கு விளையும் எத்துணையோ நன்மைகளில், பெயக்கண்டும் நஞ்சுண்ட பெருங்கருணை பெரிதாகலின், ஈண்டு அதனைக் குறித்தார் உரையாசிரியர். திருமால் தங்கை உமையாதல்பற்றி திருமாலுக்குச் சிவபெருமான் அத்தான் ஆனார். இதன்கண் அடிதொறும் இரண்டிரண்டு தொடர்கள் மடங்கி வந்தமை காண்க.