பக்கம் எண் :
 
198தண்டியலங்காரம்

ஆ தரனும் - இடபத்தை நடத்துவானும், மா தரன் - பெருமையைத் தரித்த முக்கட்கடவுள் எ - று.

இதில் 'உமாதரன்' என்ற ஒரு சொல்லே நான்கு அடிகளிலும் மடங்கி வந்தமை யுணர்க. அளவடிச் செய்யுளாக்கிற் செந்துறையாம்.

(வி - ரை) இப்பாடற்கண் ஒரு சொல்லே நான்கு அடிகளிலும் மடங்கி வருதலின், இது இயமாஇயமகம் ஆயிற்று.

'அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே' என்பதால் திருவைத் தரித்த திருமாலும் முக்கட் கடவுளின் ஒரு கூறே ஆவர். அதுபற்றியே ஈண்டு 'மாதரனும் உமாதரனே யாவன்' என்றார். செந்துறை என்றது ஈண்டுக் குறள் வெண் செந்துறையையாம். அளவடி - நாற்சீரடி. இங்ஙனம் பிரிப்பின் பின்வருமாறு ஆகும்.

'உமாதரனு மாதரனு மாதரனு மாதரனு 
மாதரனு மாதரனு மாதரனு மாதரன்' 

அந்தம் இல்லாதும், அளவிரண்டொத்து முடியின் வெள்ளைச் செந்துறையாகும் (யாப்பருங் - 27) என்பதாலும், விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடையதாக வருதலாலும், இது குறள்வெண் செந்துறை யாயிற்று.

இனிப் பாடக மடக்கு வருமாறு :-

இரண்டடிப் பாடக மடக்கு

எ - டு :

'பணிப வநந்தன தாக மன்னுவார்
பணிப வநந்தன தாக மன்னுவார்
அணியென மேயது மன்ப ராகமே
அணியென மேயது மன்ப ராகமே'

இ - ள் : பணி - பாம்புகளுக்கு, பவநம் - இடம், தனது ஆகம் மன்னுவார் - தனது மார்பகமாக நிற்பார், பணி - தாழ்ந்த, பவம் - பிறப்பு, நந்தல் - இறப்பு, நதாக - இல்லையாக, மன்னுவார் - நிலைபெறுவார், அணியென - அழகென்று சொல்ல, மேயதும் - உறைவதும், அன்பர் ஆகமே - அன்பருடைய உள்ளமே, அணியென - அலங்காரம் என்று சொல்ல, மேயதும் - விரும்புவதும், மன் - என்றும் உள்ள, பராகம் - திருவெண்ணீற்றை எ - று.

பவனம் - இடம். பணிபவம் - தாழ்ந்த பிறப்பு. நதாக - இல்லையாக.

(வி - ரை) பாடகம் - வளைவாக மடங்கியிருக்கும் ஒருவகைக் காலணி. அது மடங்கியிருத்தல் போன்று, இரண்டடிகள் இப்பாடற்கண் மடங்கி வருதலின், இது இரண்டடிப் பாடக மடக்காயிற்று.

நதாக - இல்லையாக; இதன்கண் உள்ள நகரம் இன்மைப் பொருளைக் குறித்தது. பராகம் - தூளி; இங்கே திருநீற்றைக் குறித்தது.

அடிதொறும் இருதொடர்கள் மடங்கிவந்த பாடக மடக்கு

எ - டு :

'கோடா ராவிப் பாற்குருகே!
கோடா ராவிப் பாற்குருகே