பக்கம் எண் :
 
146இறையனார் அகப்பொருள்

    இனிக், காவலர் கடுகுதற்குச் செய்யுள்:

  ‘அடிக்கண் அதிரும் கழலரி கேசரி தெவ்வனுங்கக்
  கொடிக்கண் இடியுரும் ஏந்திய தென்னவன் கூடலன்னாள்
  வடிக்கண் இரண்டும் வளநகர் காக்கும்வை வேலிளைஞர்
  துடிக்கண் இரண்டுங்கங் குல்தலை என்றும் துயின்றிலவே.’    (218)

    இனி, நிலவு வெளிப்படுதற்குச் செய்யுள்:

 
‘சென்று செருமலைந் தார்கள்செந் தீமூழ்கச் செந்நிலத்தை
  வென்று களங்கொண்ட கோன்தமிழ் நாடன்ன மெல்லியலாய்
  இன்றிவ் விரவின் இருள்சென் றிடங்கொண்ட தெங்குக்கொல்லோ
  நின்று விசும்பிற் பகல்போல் விரியும் நிலாமதியே’          (219)

    இனிச், சிறைகாவல் எல்லாம் வந்த செய்யுள்:

   
‘இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்
    விழவின் றாயினுந் துஞ்சா தாகும்
    மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்
    வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
    பிணிகொள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
    துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
    இலங்குவேல் இளையர் துஞ்சின் வையெயிற்று
    வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
    அரவவாய் ஞமலி குரையாது மடியின்
    பகலுரு வுறழ நிலவுகான்று விசும்பின்
    அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே
    திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
    இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
    கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும்
    வளைகட் சேவல் வாளாது மடியின்
    மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்
    எல்லாம் மடிந்த காலத் தொருநாள்
    நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே
    அதனால், அரிபெய் புட்டில் ஆரப் பரிசிறந்து
    ஆதி போகிய பாய்பரி நன்மா
    நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
    கல்முதிர் புறங்காட்டன்ன
    பல்முட் டின்றால் தோழிநங் களவே.’             (அகம்-122)

               ஆறு பார்த்துற்ற அச்சக்கிளவி

      இனி, ‘ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவியும்’ என்பது: ஆறு என்பது வழி,
 பார்த்துறுதல் என்பது பரிவுறுதல், அச்சம்