என்னை,
‘முதல்கரு
உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே’
(அகத்திணையியல்- 3)
என்றாராகலின்.
ஐந்திணை முதற்பொருள்
அவை வருமாறு:
அவற்றுள், முதல் இரண்டு வகைப்படும், நிலமும் பொழுதும் என.
என்னை,
‘முதலெனப் படுவது நிலம்பொழு
திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே’
(அகத்திணையியல்-4)
என்றாராகலின்.
குறிஞ்சிக்கு நிலம், மலையும் மலைசார்ந்த இடமும்;
பொழுது,
கூதிரும்யாமமும் முன்பனியும்.
நெய்தற்கு நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்;
பொழுது எற்பாடு.
பாலைக்கு நிலம் இல்லை.
‘நடுவண்
ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய
பண்பே’ (அகத்திணையியல்-2)
என்றார் தொல்காப்பியனார் ஆகலின்; பொழுது, நண்பகலும், வேனிலும்,
பின்பனியும். நிலம் இன்றிப் பொழுதினானே திணையாமோ எனின்,
குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலைநிலமாம்
என்பது.
முல்லைக்கு நிலம், காடும் காடுசார்ந்த இடமும்;
பொழுது, காரும்
மாலையும்.
மருதத்திற்கு நிலம், பழனமும் பழனஞ் சார்ந்த
இடமும்; பொழுது,
வைகறை யாமம்.
அஃது என்னை பெறுமாறு எனின்,
‘மாயோன் மேய
காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
|