சூத்திரம்-46
கொடுமை இல்லைக் கிழவி மேற்றே.1
என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகளது பெருமை உணர்த்துதல்
நுதலிற்று.
இதன் பொருள்: கொடுமை இல்லை என்பது - தக்காள்
எனப்படுதலல்லது தகாள் எனப்படுதல் இல்லை
என்றவாறு; கிழவி மேற்றே
என்பது-தலைமகள்மாட்டு என்றவாறு.
தலைமகள் எக்காலத்தும் ஒருதன்மையள் என்றவாறு: தலைமகன்
தன்மாட்டு வந்து உறைந்த காலத்தே
தக்காளாய்ப் பரத்தையர்மாட்டுச்
சென்று உறைந்த காலத்துத் தகாள் ஆங்கொல்லோ எனின்,
ஆகாள்
என்றவாறு: அதற்குச் செய்யுள்:
தலைவி சிறப்புரைத்தல்
‘நிரந்தாங் கெதிர்ந்தார் அவியநெல் வேலித்தன் நீள்சிலையால்
சரந்தான் துரந்துவென் றான்தமிழ் நாடன்ன தாழ்குழலாள்
பரந்தார் வருபுனல் ஊரன்தன் பண்பின்மை எங்களையும்
2கரந்தாள் கடலிடம் எல்லாம் புகழ்தரும் கற்பினளே.’ (291)
இது தலைமகன் பரத்தையர்சேரியனாகத் தலைமகள் பக்கற்புக்க
பாணன் தலைமகளது நிலைமை கண்டு
தன் விறலிக்குச் சொல்லியது. (13)
சூத்திரம்-47
கிழவோன் முன்னர்க் கிழத்தி தற்புகழ்தல்
புலவிக் காலத்தும் புரைவ தன்றே.
என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகள் திறத்து இன்னதோர் குணம்
உண்டு என்பது உணர்த்துதல்
நுதலிற்று.
இதன் பொருள்: கிழவோன் முன்னர்க் கிழத்தி தற்புகழ்தல்
என்பது-தலைமகன்முன்னர்த்
தலைமகள் தன்னைப் புகழ்தல் என்றவாறு;
புலவிக் காலத்தும் புரைவது அன்றே என்பது-புலவிக்காலத்தன்றே
அஃது
உரியது, அந்தக் காலத்துந் தகாது என்றவாறு.
எனவே, தலைமகள் எவ்விடத்தும் தன்னைப் புகழப்பெறாள் என்பது.
எனவே, தலைமகளது பெருமை பெற்றாம்.
இனிக், கிழவி தற்புகழ்தல்
பெறாள் என, பரத்தை தற்புகழ்தல் பெறும்
(பாடம்) 1. மேன. 2. கரந்தா ளகலிட.
|