பாசிநீக்கம் வருமாறு:
‘சென்றார் வருவது நன்கறிந் தேன்செருச் செந்நிலத்தை
வென்றான் பகைபோல் மெலியல் மடந்தைமுன் வெற்பெடுத்து
நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள்புயலால்
பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே.’
கொண்டுகூட்டுப் பொருள்கோள் வருமாறு:
‘கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன்நெடு மாறன்முந்நீர்
தூவைச் சுடர்வே லவர்சென்ற நாட்டுள்ளும் துன்னுங்கொல்லோ
பூவைப் புதுமலர் வண்ணன் திரைபொரு நீர்க்குமரிப்
பாவைக் கிணையனை யாய்கொண்டு பண்டித்த பன்முகிலே.’ (318)
ஒருசிறைநிலை வருமாறு:
‘கோடல் மலர்ந்து குருகிலை தோன்றின கொன்றைசெம்பொன்
பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த பாழிவென்ற
ஆடல் நெடுங்கொடித் தேரரி கேசரி அந்தண்பொன்னி
நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே.’ (319)
விற்பூட்டு என்பது, தலையும் கடையும் பொருள்கொள்வது;
விதலையாப்பு என்பது, தலையும் இடையும் கடையும்
பொருள்கொள்வது;
பாசிநீக்கம் என்பது, சொற்றோறும் அடிதோறும் பொருளேற்று
நிற்பது;
கொண்டுகூட்டு என்பது, சொற்களைக் கொண்டுகூட்டிப்
பொருள்கொள்ளுமாறு அறிந்துகொள்வது;
ஒருசிறைநிலையென்பது, ஒரு பாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள்
ஒருவழி நிற்பது.
ஆங்கப்பத்தே என்பது-ஆங்கு என்பது அசைச்சொல்; பத்து என்பது
தொகை; ஏ என்பது ஈற்றசை
ஏகாரம்;
அகனைந்திணையும் உரைத்தலாறே என்பது-அகனைந்திணையும்
அறிந்து உரைக்க அகப்பாட்டினை வல்லோர்
சொல்லுமிடத்து என்றவாறு.
‘முளிதரு வேனற்கண் கானவர் ஆர்ப்ப முகிற்கணங்கள்
தளிதரு தண்சிலம் பாதக்க தன்று தரணிதன்மேல்
அளிதரு செங்கோல் அரிகே சரிஅந்தண் கூடலன்ன
ஒளிதரு வாள்நுத லாள்நைய இவ்வா றொழுகுவதே.’ (320)
இப்பாட்டிற்குத்
|