திணை: குறிஞ்சி;
கைகோள் - களவு;
கூற்று
- தோழிகூற்று;
கேட்டான் - தலைமகன்;
இடம் - முன்னிலை;
காலம்
- எதிர்காலம், வந்து ஒழுகாநின்றானுக்கு உரைத்தமையான்
நிகழ்காலமாகவும் கொள்க;
எச்சம்
- நீ யென்பது எஞ்சிற்று;
மெய்ப்பாடு
- அச்சம், இவ்வொழுக்கம் பிறரறியின் இறந்துபடும்
என்னும் நிலையினளாயினமையின்;
பயன்
- வரைவுகடாதல்;
பொருள்கோள் - தளிதரு தண்சிலம்பா தக்கதன்று இவள் நைய
இவ்வாறு ஒழுகுவது எனக் கொண்டமையின்,
விதலையாப்பு.
‘மானக் கடுஞ்சிலை மான்தேர் வரோதயன் வாள்முனைபோன்
றூனப் படநினைந் தூடல்பொன் னேயுறு வெஞ்சுரத்து
நானக் குழல்மிசை நான்கொய்து கொண்டு நயந்தணிந்த
கானக் குரவினம் போதே கமழுமென் கைத்தலமே.’ (321)
இப்பாட்டுக்குத்,
திணை
- மருதம்;
கைகோள்
- கற்பு;
கூற்று
- தலைமகன் கூற்று, தலைமகன் பரத்தையைக் கோலச்சிறப்புச்
செய்தானென்று
வேறுபடலுற்ற தலைமகள் குறிப்பறிந்து தலைமகன்
சொல்லியது.
கேட்டாள் - தலைமகள்;
இடம்
- முன்னிலை;
காலம்
- இறந்த காலம் பற்றி வந்த நிகழ்காலம்;
எச்சம் - என்னோடு என்பது எஞ்சிற்று;
மெய்ப்பாடு
- நடுக்கம்;
பயன்
- கேட்டுத் தலைமகள் ஊடல் தீர்வாளாவது;
பொருள்கோள் - விதலையாப்பு, ‘நான் கொய்து அணிந்த குரவினம்
போதே இன்னும் கமழும் என்
கைத்தலம்’ என்று மூன்றிடத்துப்
பொருள்கொண்டமையான் என்பது.
(23)
|