சூத்திரம்-14
தோழிக் குரியன கோடாய் தேஎத்து
மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே.
என்பது என்னுதலிற்றோ எனின், போய் அறத்தொடுநிலை உணர்த்துவார்
அவ்வறத்தொடு நிலைநிற்கும் முறைமையுணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: தோழிக்கு உரிய என்பது - தோழி
சொல்லுதற்கு
உரிய என்றவாறு; கோடாய் தேஎத்து என்பது - செவிலித்தாய்மாட்டு
என்றவாறு; மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே என்பது -
மாறுகொள்ளாமை சொல்லுஞ் சொற்களும் உண்டு என்றவாறு.
எற்றினொடு மாறுகொள்ளாமையோ எனின், தாயறிவினொடு
மாறுகொள்ளாமையும், தலைமகள் பெருமையொடு மாறுகொள்ளாமையும்,
தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும், தோழி தனது காவலொடு
மாறுகொள்ளாமையும், நாணினொடு மாறுகொள்ளாமையும், உலகினொடு
மாறுகொள்ளாமையும் எனக் கொள்க. என்னோத்துக்கண்ணோ எனின்,
‘காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்’ (இறையனார் 29)
என்னுஞ் சூத்திரத்துட் சொல்லப்பட்ட நான்கு இடத்தும் வேறுபாடு
உண்டாம்; அஃது எப்பொழுது உண்டாயிற்று அப்பொழுதே தோழிக்குப்
புலனாம்; என்னை, தான் அவள் என்னும் வேற்றுமையிலளாகலான். அவ்வா
றாயினவிடத்துத் தோழி எனக்குப் புலனாயினவாறேபோல யாய்க்கும்
புலனாம்; ஆயினஞான்று, வாளா ஒழியாள் அறிவாரை வினாவும்;
வினாவினவிடத்து, வினாவப்பட்டார் தெய்வத்தினான் ஆயிற்று என்ப.
என்னை, பிறிதொன்று சுட்டியுணருந் தன்மைத்தன்று இக்
குலமாகலானும், அதுவே சொல்லுதற் பயத்தது தங்கருமமாகலானும்,
அறியாதேயுஞ் சொல்லுப. சொல்ல, இவள் தெய்வத்திற்கு வழிபாடு
செய்விக்கும்; செய்விக்கத், தலைமகட்குக் கற்பழியும்; என்னை, தன்
தலைமகனையன்றிப் பிறிதோர் தெய்வம் வணங்கார் பத்தினியாராகலின்.
தெய்வத்தை வணங்கக் கற்பழியும் என்று தலைமகள் ஆற்றாளாம்.
அல்லதூஉம், ‘ஒழுக்கக் குற்றக் குறைபாடு நீங்கி ஓங்கிவராநின்ற தொல்குலம்,
மணிக்கலங் கதுவாய்ப்பட்டது போல, யான் தோன்றி இவ்வகை அணங்காட்டு
அறியாது அணங்காட்டு எடுத்துக்கொள்ளப்பட்டது’ எனவும், ‘யாம் உற்றது
நிரப்பப்பாட்டானும் வேலன்றனது
|