“விளக்கினன்ன சுடர்விடுத்தாமரைக் களிற்றுச் செவியன்ன பாசடைதயங்க வண்டுறை மகளிரிரியக் குண்டுநீர் வாளையுகளுமூரற்கு நாளை மகட்கொடையெதிர்ந்த மறங்கெழு பெண்டே தொலைந்த நாவினுலைந்த குறுமொழி யுடன்பட்டோரேத் தாயரோடழிபுடன் சொல்லலை கொல்லோ நீயேவல்லைக் கன்றுபெறு வல்சிப்பாணன் கையதை வள்ளுயிர்த் தண்ணுமை போல வுள்யாது மில்லதோர் பொய்ப்படு சொல்லே”1 |
(நற்றிணை - 310) |
இது, விறலிக்கு வாயின்மறுத்தது. மறுப்பாள் போல் நேர்வ வந்துழிக் காண்க. |
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்; நீத்தகிழவனை - பரத்தையிற் பிரிந்து தலைவியைக் கைவிட்ட தலைவனை, நிகழுமாறு படீஇ - தானொழுகும் இல்லறத்தே படுத்தல் வேண்டி, காத்த தன்மையில் - புறத்தொழுக்கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினாலே, கண் இன்று பெயர்ப்பினும்-கண்ணோட்டமின்றி நீக்கினும். |
உதாரணம்: |
“மனையுறை கோழிக்குறுங்காற்பேடை வேலி வெருகின்மாலையுற்றெனப் புகுமிடனறியாது தொகுபுடன்குழீஇப் |
1. பொருள்: விளக்கொளி போலும் தாமரை மலருடைய கொடியின் களிற்றுச்செவிபோலும் இலைகள் அலையும் படியுள்ள நீர்த்துறையில் ஆடும் மகளிர் ஓடும்படி ஆழமான நீரில் வாளைமீன் துள்ளும்படியான ஊரனுக்கு நாளையும் ஒரு பரத்தையை விருந்தாகச் சேர்க்கும் விறலிப் பெண்ணே! மெய் நீங்கிய நாவால் கூறும் குறுமொழியை ஏற்று உண்மையாராய்ந்த பரத்தையர் தாயரிடம், கன்று உரித்துண்ணும் பாணனது கையில் உள்ள வேற்றிடம் உடைய தண்ணுமை போன்ற உள்ளீடு இல்லாத பொய்ம்மொழிகளைக் கூறவில்லையோ, கூறி அவரையும் யாருடனாவது கூட்டுக. அத்தகைய பொய்ம்மொழிகளை இங்கு வந்து கூறற்க, |