பைதற்பிள்ளைக் கிளைபயிர்ந்தாஅங் கின்னாதிசைக்குமம்பலொடு வாரல்வாழிய ரையவெந்தெருவே”1 |
(குறுந் -139) |
இதனுள் ‘அம்பலொடுவாரல்’ எனவே, பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று. கோழி போலத் தாயர் மகளிரைத் தழீஇக் கொண்டாரென்றலிற் புறம் போயும் பயமின்றெனக் காத்த தன்மை கூறிற்று. |
பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப் படப்பிறவும்; பிரியுங்காலை எதிர் நின்று சாற்றிய - தலைவன் கற்பிடத்துப் பிரியுங்கால் தெய்வத் தன்மையின்றி முன்னின்று வெளிப்படக் கூறிய, மரபுடை எதிரும் உளப்பட பிறவும், முறையுடைத்தாகிய எதிர்காலமும் இறந்த காலமும் உட்படப் பிறவற்றுக் கண்ணும். |
‘எதிரும்’ என்ற உம்மை எச்சவும்மை. ‘பிற’ ஆவன தலைவன் வரவுமலிந்து கூறுவனவும், வந்த பின்னர் முன்பு நிகழ்ந்தன கூறுவனவும் வற்புறுப்பாள் பருவமன்றெனப் படைத்து மொழிவனவும் தூதுகண்டு கூறுவனவும், தூதுவிடுவனவும், சேணிடைப் பிரிந்தோன் இடைநிலத்துத் தாங்காது இரவின் வந்துழிக் கூறுவனவும், நிமித்தங்காட்டி கூறுவனவும் உடன்சேறலை மறுத்துக் கூறுவனவும் பிறவுமாம். |
“பா அலஞ்செவி” என்னும் பாலைக்கலி (5)யுள் |
“பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வ தந்நாள் கொண்டிறக்கு மிவளரும்பெறனுயிரே”2 |
இதனுட் ‘புரிந்தனை’ என இறப்பும் ‘இறக்குமென’ எதிரும் மரபில் தப்பாமல் வந்தவாறு காண்க. |
“வேனிற்றிங்கள் வெஞ்சுரமிறந்து செலவயர்ந்தனையானீயே நன்று |
1. பொருள்: பக்கம் 154 காண்க. 2. பொருள்: நெடுந்தகாய்! நீ இவளிடம் பொய்யான அருளைச் செய்தாய். இவளைக் காத்தலைக் கைவிட்டு நீ செல்லும் நாள் எந்நாள்? அந்த நாளிலேயே இவளது பெறலரியவுயிர் போய்விடும். |