பக்கம் எண் :

கற்பியல் சூ.9173
 

நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன்
முறுவல் காண்டலி னினிதோ
விறுவரை நாடநீ விரைந்து செய்பொருளே”
1
 

(ஐங்-309)
 

இஃது எதிரது நோக்கிற்று.
  

“புறவணி நாடன் காதன்மடமக
ளொண்ணுதல் பசப்பநீசெலிற் றெண்ணீர்ப்
போதவிழ் தாமரையன்னநின்
காதலம் புதல்வ னழுமினிமுலைக்கே”
2  

(ஐங்குறு-424)
  

இதுவும் அது. இனிப் ‘பிற’ வருமாறு.
  

“பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துள் புலம்பு கொடெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமெனவிசைக்கு
நரம்பொடு கொள்ளுமத்தத் தாங்கட்
கடுங்குரற் பம்பைக் கதநாய்வடுகர்
நெடும் பெருங்குன்ற நீந்தி நம்வயின்
வந்தனர் வாழிதோழிகையதை
செம்பொற் கழறொடிநோக்கு மாமகான்
கவவுக்கொளின் குரல் கேட்டொறும்
அவவுக்கொண் மனத்தேமாகிய நமக்கே”
3  

(நற்-212)


1. பொருள்: வரைநாடனே! வேனிற்பருவத்து  கொடிய  சுரத்தைக்  கடந்து பொருள் செயவிரும்பினாய்.
அப் பொருள் நின்னையே விரும்பும் இவளது முதற்சூலிற் பொருந்திப் பிறந்த சிறுவனின் முறுவலைக்
காண்பதினும் சிறந்ததாமோ?

2. பொருள்: தலைவ! காடுகள் செறிந்த நாடனின் அன்பு மகளது அழகிய நுதல் பசக்கும்படி நீ பிரிந்து
சென்றால் தாமரை    மலர்போற்  சிறந்த நின் புதல்வன் பாலுக்கு  அழநேரிடும். (தலைவி யிறப்பள் என்பது குறிப்பு)
  

3. பொருள்: தோழீ! வேட்டுவன் பார்வைப் பறவை  வைத்து விரித்த வலைக்கு அஞ்சி நெடியகாலுடைய
‘கணந்துள்’ என்னும் பறவை தனிமை கொண்டு  கூவும் தெளிந்த ஓசை வயிரியரது கதுமென ஒலிக்கும்
யாழ்நரம்போசையொடு கலந்து ஒலிக்கக்கூடிய வழியிடத்து பம்பையும் கதநாயும் உடைய வடுகர் திரியும்
குன்றத்தைக் கடந்து, செம்பொன்தொடி  கழலுவதை    நோக்கி   நம்மகன்   நம்மையணைத்தபடியே
அழுவதைக்