1. பொருள்: நீலமணி போலச் சூல்கொண்டு ஆகாயம் அதிர முழங்கி, நீரால் நிலம் குளிர்ந்து காடுதழைப்ப, உழவர் ஆர்ப்பரிக்க பிணையினைத் தழுவி இரலைமான் பயிரில் துள்ள மேகம் மிக்க மழையைத் தந்த கார் காலத்தே, பாணனே! புரவியின் மணி ஒலிக்க பாகன் வாவிச் செல்ல அடக்கி விடப்படும் விரையும் நெடிய தேர்ச் சக்கரம் ஈரமான வழியை அறுக்க, யாழ் செவ்வழியிசை தோற்றுவிக்க இந்த நிலையில் அவர் வாரா ராயின் அவர் நிலை என்னாம்? சிறிதே கூறுக என்று கற்புடைய தலைவி கூறச் செய்யும் தொழிலில் மனம் கழிந்த மயக்கம் அவட்குத்தீருமாறு தலைவ! வந்தாய், நன்றே செய்தாய். வாழ்க நின் கண்ணி. கூந்தலும் இனிய நகையும் இளமையும் உடையாள் தழுவ நின் மார்பு மன்னுக. |