1. பொருள்: கற்பாறை விளங்கும் வழியிற் சென்ற காதலர் தாம் மீண்டும் வருவதாகக் கூறிய கார்ப் பருவம் வாராத போதே புதியதாக வந்த மேகத்தைக் கண்டு கொன்றை மரமானவை கிளைகளைச் சேர்ந்து கொடியாக மலர்களை விரித்தன. அதனால் அவை மிகவும் மடப்பத்தையுடையனவாம். 2. பொருள்: தோழி! நம் காதலர் போர் பொரும் வலியுடைய யானையது போரில் சண்டை செய்து அவர்களது போரில் மேம்பட்ட வென்றியுடையராய் வருவர் எனச் சொல்லி வந்தது அவர் வாய் மொழித்தூது. அதனால் நீ வருந்தாதே! வாழி. 3. பொருள்: கையால் இயக்குதலில் வல்ல சிறிய யாழுடைய பாணனே! நம்மவர் குறித்துச் சொன்ன பருவம்வந்து விட்டது. அவர் வந்திலர். எம்மை நினைந்து வாராராயினும் தம்மிடத்துப் பொய்படும் சொல் உண்டாதற்கு நாணவும் அறியாதவராகுதலுக்காகயான் மிக வருந்துவேன். |