“அன்னை வாழி வேண்டன்னை நம்மூர்ப் பலர்மடி பொழுதினலமிகச் சாஅய் நள்ளென வந்த வியறேர்ச் செல்வக் கொண்கன் செல்வனஃதூரே”1 |
(ஐங்குறு - 104) |
இது, புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக்கட் சென்ற செவிலிக்கு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி அவன் ஊர் காட்டிக் கூறியது. |
வகைபட வந்த கிளவி எல்லாம் தோழிக்கு உரிய என்மனார்புலவர் - தோழி கூற்றாய்த் தலைவி கூற்றினுள் அடங்குவதன்றித் தோழிக்கே கூறத்தகும் வேறுபாடு உண்டாக வந்த கிளவிகளெல்லாந் தோழிக்கு உரியவென்று கூறுவர் புலவர் என்றவாறு, |
இச்சூத்திரத்துக் கண்ஏழனுருபும் அவ்வுருபுதொக்கு நின்று விரிந்தனவுஞ் செயினென்னும் வினையெச்சமும் உரியவென்னுங் குறிப்புவினை கொண்டன. அவற்றை இன்னவிடத்தும் இன்ன விடத்தும் இன்னது செய்யினும் உரியவென்று ஏற்பித்து முடிக்க. |
காமக்கிழத்தி கூற்று |
149. | புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும் இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் *தாய்போற் கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும் இன்னகைப் புதல்வனைத் தழீஇ இழையணிந்து | |
|
1.பொருள்: அன்னையே! கேள் ! வாழி. நம்மூரில் யாரும் துயிலும் பொழுதாகிய நள்ளிருள் பரந்த நடுயாமத்தில் தன்நலம் மெலிந்து வந்த தேருடைய செல்வமுடைய தலைவனுக்குப் புதல்வனின் ஊர் அஃதாகும். * பாடம் ; தாய் போற் றழீஇக் கழறியம் மனைவியை என்பது நச். பாடம். |