பக்கம் எண் :

178தொல்காப்பியம் - உரைவளம்
 

      

பின்னை1 வந்த வாயிற் கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகையெனக்
2 குறித்த கொள்கைக் கண்ணும்
எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும்
கண்ணிய காமக் கிழத்தியர்மேன.
(10)
 

பிற்கால இலக்கண நூல்கள்
  

நம்பியகப் 105, இல.வி. 473.
  

குடிபிறந் தோரை வடுப்படுத் துரைத்தலும்
மனைவியைப் பழித்தலும் வாடா வூடலுள்
அனையவட் கழறலும் மனைவிக் கமைந்த
ஒழுக்கமும் காமக் கிழத்தியர்க் குரிய.
  

இளம்
  

என்-எனின் காமக்கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று.
  

(இ-ள்)  புல்லுதன்  மயக்கும்  புலவி முதலாகச் சொல்லப்பட்ட இடத்தினும் அந்நிகரான பிறவிடத்தினும்
குறிக்கப்பட்ட கூற்றுக் காமக்கிழத்தியர் மேலன என்றவாறு.
  

கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது.
  

காமக்கிழத்தியராவார்     பின் முறை ஆக்கிய கிழத்தியர்.  அவர் மூவகைப்படுவர். ஒத்த கிழத்தியரும்
இழிந்த  கிழத்தியரும்  வரையப்பட்டாரும்  என,
1  ஒத்த கிழத்தியர2    முந்துற்ற  மனையாளன்றிக் காமம்
பொருளாகப்  பின்னுந் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தாராவார் -   அந்தணர்க்கு  அரச
குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும்,   அரசருக்கு ஏனை  யிரண்டு
குலத்தினுங்    கொடுக்கப்பட்டாரும்,    வணிகர்க்கு    வேளாண்    குலத்திற்     கொடுக்கப்பட்டாரும்,
வரையப்பட்டார்   -   செல்வராயினார்   கணிகைக்   குலத்தினுள்ளார்க்கும்   இற்கிழமை     கொடுத்து
வரைந்துகோடல்.
  


1. பின்னர்

2. மிகைபடக்

1,2. ஒத்த கிழத்தியர் - குலத்தால் ஒத்த கிழத்தியர்.
இழிந்த கிழத்தியர் -  குலத்தால்  தலைவன்  குலத்தினும்  இழிந்த
  கிழத்தியர்.  வரையப்பட்டார் -
கணிகையருள் மணந்து கொள்ளப்பட்டவர்.